இளைய தலைமுறையினரை கவரும் நோக்கில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், ஆட்டோ எக்ஸ்போ 2018 வாகன கண்காட்சியில் புதிய ஹோண்டா எக்ஸ்-பிளேட் பைக் மாடலை அறிமுகம் செய்து காட்சிப்படுத்தியுள்ளது.
ஹோண்டா எக்ஸ்-பிளேட் பைக்
இந்தியா சந்தையில் பிரிமியம் ரக மாடல்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ரோபோ முகத்தை பெற்ற ஸ்டைலிஷான அம்சத்தை பெற்ற எக்ஸ் பிளேட் மோட்டார் பைக்கில் 160சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இளம் தலைமுறையினர் விரும்பும் வகையில் எந்திரன் முகத்தை போன்ற அமைப்பை கொண்ட முழுமையான எல்இடி ஹெட்லைட்டை பெற்றுள்ள இந்த பைக் இந்நிறுவனத்தின் சிபி ஹார்னெட் 160 பைக் மாடலை பின்னணியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான பேனல்களை கொண்டுள்ள கட்டமைப்பில், எக்ஸ்-பிளேட் கிராபிக்ஸ் ஸ்டிக்கரை பெற்றுள்ளது.
முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை பெற்றுள்ள இந்த பைக்கில், சர்வீஸ் இன்டிகேட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் உட்பட பல்வேறு அம்சங்களுடன் அபாய விளக்குகள், எல்இடி டெயில் விளக்கு ஆகியவற்றை கொண்டுள்ளது.
சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கில் இடம்பெற்றுள்ள அதே எஞ்சினை பெற உள்ள எக்ஸ-பிளேட் பைக்கில் 13.9hp ஆற்றலை வெளிப்படுத்தும் 162.7சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இதன் டார்க் 13.9Nm ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
முன்புறத்தில் டிஸ்க் பிரேக் வசதியுடன் பின்புறத்தில் டிரம் பிரேக் கொண்டதாக வந்துள்ளது. ஆப்ஷனலாக டிஸ்க் பிரேக் பின்புறத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை.
ஹோண்டா எக்ஸ்-பிளேட் பைக் விலை ரூ.80,000- ரூ.85,000 விலைக்குள் விற்பனைக்கு கிடைக்கப்பெறலாம். இந்த பைக்கில் கருப்பு, சிவப்பு, நீலம், சில்வர் மற்றும் பச்சை ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது. வருகின்ற மார்ச் மாதம் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.
இதை தவிர ஹோண்டா ஆட்டோ எக்ஸ்போவில் 11 மாடல்களை மொத்தமாக காட்சிப்படுத்தியுள்ளது. அவற்றில் மிக முக்கியமானவை ஆக்டிவா 5ஜி, கிரேஸியா, ஆப்ரிக்கா ட்வின், க்ளிக் ஆகிய மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது.