150 சிசி முதல் 160 சிசி சந்தையில் உள்ள பைக்குகளுக்கு சவாலாக விளங்குகின்ற ஹோண்டா யூனிகார்ன் பிஎஸ்6 பைக்கின் முக்கியமான சிறப்புகள் மற்றும் முந்தைய மாடலை விட மாறுபட்டதாக பெறும் அம்சங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
பெரிய அளவில் தோற்றத்தில் மாற்றங்களை வழங்கவில்லை ஆனால் புதுப்பிக்கப்பட்ட எஃப்ஐ என்ஜினுடன் விளங்குகின்ற இந்த பைக்கிற்கு போட்டியாக அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி, பஜாஜ் பல்சர் 150 என இரு மாடல்களை எதிர்கொண்டாலும், குடும்பத்திற்கு ஏற்ற ஸ்டைலிங் அம்சங்களை இந்த பைக் பெறுகின்றது.
ஸ்டைலிங் அம்சங்கள்
முன்பே நாம் குறிப்பிட்டபடி தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் வழங்கப்படவில்லை. நிறங்களில் கூட மாற்றங்கள் வழங்கப்படாமல் சில க்ரோம் பாகங்களில் மட்டும் ஸ்டைலிங் வசதிகள் யூனிகார்னில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் முக்கியமாக 24 மிமீ வரை இருக்கையின் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாராளமான இடவசதியை பெறுகின்றது.
என்ஜின்
முன்பாக இந்த மாடல் 150சிசி என்ஜின் பெற்றிருந்த நிலையில் இப்போது 160சிசி என்ஜினை கொண்டுள்ளது. கார்புரேட்டர் என்ஜினுக்கு மாற்றாக வந்துள்ள PGM-FI HET (Honda Eco Technology) நுட்பத்தினை கொண்டுள்ளது. 162.7 சிசி என்ஜின் அதிகபட்சமாக 12.73 bhp பவர், 14 NM டார்க் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கபட்டுள்ளது.
வசதிகள்
பெரும்பாலான 125சிசி பைக்குகள் கூட இப்போது எல்இடி ஹெட்லைட் பெறும் நிலையில் இந்த மாடலில் டிசி ஹாலஜென் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டு, முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்கள்
இந்த பைக்கிற்கு நேரடி போட்டியாக அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி, பஜாஜ் பல்சர் 150 போன்றவற்றுடன் 150 சிசி – 180 சிசி வரையில் உள்ள மற்ற ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் மாடல்களான ஜிக்ஸர் , பல்சர் என்எஸ் 160, அடுத்ததாக வரவுள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் போன்றவை கடும் சவாலாக விளங்கும்.
யூனிகார்ன் பிஎஸ்6 விலை
முந்தைய பிஎஸ் 4 மாடலை விட ரூ.12,500 வரை விலை உயர்த்தப்பட்டு இப்போது புதிய ஹோண்டா யூனிகார்ன் பிஎஸ்6 விலை ரூ.96,854 என நிர்ணையிக்கப்பட்டுள்ளது.