ஆக்டிவா இ மாடலுக்கு அடுத்தபடியாக ஹோண்டா நிறுவனம் கியூசி 1 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது இந்த மாடலில் ஃபிக்சட் பேட்டரி கொடுக்கப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 80 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஜனவரி 1 முதல் இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு இந்த மாடல் நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்க துவங்க உள்ளது ஆக்டிவா இ ஆனது முதற்கட்டமாக முன்னணி நகரங்களிலும் பின்பு படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Honda qc1 electric scooter
Econ, Standard என இரு டிரைவ் மோடுகளை பெற்ற ஹோண்டாவின் QC1 ஸ்கூட்டரில் 1.5Kwh லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு 1.8KW பவரை வழங்கும் 3 பேஸ் BLDC மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 77 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.
முழுமையான சிங்கிள் சார்ஜில் IDC முறைப்படி 80 கிமீ வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஒற்றை பேட்டரி கொண்ட மாடல் 45 முதல் 55 கிமீ கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஸ்கூட்டரின் எடை வெறும் 89.5 கிலோ மட்டுமே ஆகும்.
தினசரி அலுவலக பயன்பாடு அல்லது குறைவான தூரத்தில் பயணிப்பவர்களுக்கு ஏற்ற வகையில் தான் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. அதே நேரத்தில் 26 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸ் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
5 அங்குல எல்சிடி கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ள இந்த மாடல் ஆனது அடிப்படையான தகவல்களை இந்த கிளஸட்டரில் வழங்குகின்றது. குறிப்பாக பேட்டரி லெவல் இண்டிகேட்டர் வேகம் உள்ளிட்ட தகவல்களை மட்டும் உள்ளது. எவ்விதமான கூடுதலான கனெக்டிவிட்டி ஆப்ஷனை பெறவில்லை.
இந்த மாடலுக்கு முன்பதிவு ஜனவரி முதல் துவங்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து டீலர்களிடமும் மார்ச் முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.