ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடல் Watts AHEAD என டீசரில் குறிப்பிட்டு வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. மாடலின் பெயர் மற்றும் முக்கிய விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
ஆனால் குறிப்பாக ஏற்கனவே சில தகவல்களை ஹோண்டா வெளியிட்டு இருந்த நிலையில் தற்பொழுது வரவுள்ள மாடல் அனேகமாக ஆக்டிவா பிராண்டிலேயே எலக்ட்ரிக் மாடலாக அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
குறிப்பாக இந்திய சந்தைக்கு இரண்டு மாடல்களை ஆரம்ப கட்டத்தில் அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டு இருக்கின்ற நிலையில் ஒன்று பேட்டரியை ஸ்வாப் செய்யும் வகையிலான நுட்பத்தை கொண்ட மாடல் மற்றொன்று பேட்டரி நீக்க இயலாத வகையிலான ஃபிக்சட் மாடலாக அமைந்திருக்கும் இவற்றில் இரண்டையும் இந்தியாவிற்கு கொண்டு வரவுள்ளது. மேலும் இவற்றின் ரேஞ்ச் அனேகமாக 100 முதல் 150 கிலோமீட்டர் நிகழ் நேரத்தில் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பல்வேறு கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களையும் அடிப்படையாகவே இந்த மாடல்கள் பெறும் என்பதோடு கூடுதலாக போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையிலான வசதிகளையும் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை அனேகமாக ரூபாய் 1,20,000 முதல் துவங்கி அதிகபட்சமாக ரூபாய் 1,50,000 வரை நிறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலதிக விபரங்கள் தொடர்ந்து டீசர் மற்றும் பல்வேறு தகவல்களை வெளியாகும் நவம்பர் 27ஆம் தேதி இந்த மாடல் பற்றி அறிந்து கொள்ளலாம்.