இந்தியாவின் முன்னணி ICE ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஆக்டிவா ஸ்கூட்டர் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாக உள்ளது.
இந்நிறுவனம் டீசரில் பல்வேறு தகவல்களை வெளியிட்டு இருக்கின்றது குறிப்பாக பேட்டரி ஸ்வாப்பிங் நுட்பத்துடன் கூடுதலாக பிளக்-இன் சார்ஜிங் வடிவமைப்பையும் பெற்றதாக விளங்க உள்ள இந்த மாடலானது ஏற்கனவே சர்வதேச அளவில் சில நாடுகளில் கிடைக்கின்ற CUV-E: என்கிற மாடலின் அடிப்படையில் அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுது.
இந்திய சந்தைக்கு வரவுள்ள மாடல் முழுமையான சிங்கிள் சார்ஜில் 104 கிலோ மீட்டர் ரேஞ்சு வெளிப்படுத்தும் என கூறப்படுகின்றது. இதில் இரண்டு விதமான வேரியண்டுகள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒன்று கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்கள் பெறக்கூடிய 7 அங்குல டிஎஃப்டி மாடல் மற்றொன்று ஐந்து அங்குல கிளஸ்டர் கொன்ட வேரியண்டாக இருக்கலாம்.
முதலில் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெளியாக உள்ள இந்த மாடலானது படிப்படியாக மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படலாம். குறிப்பாக இந்த இ-ஸ்கூட்டரின் விலை ஆனது ரூபாய் 1.20 முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது முழுமையான விபரங்கள் அடுத்த சில மணி நேரங்களில் வெளியாகும்.