ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற கிரேசியா 125 ஸ்கூட்டரை 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. ஆனால் தொடர்ந்து சிறப்பான வரவேற்பினை பெற தவறியதால் குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
சமீபத்தில் டியோ 110 அடிப்படையில் டியோ 125 அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து வரவேற்பில்லாத கிரேசியா 125 நீக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்நிறுவனம் டியோ ஸ்போர்ட்ஸ் எடிசன் மாடலையும் நீக்கியுள்ளது.
Honda Grazia 125 Discontinued
125சிசி எஞ்சின் பெற்றதாக கிரேசியா மாடலில் ஹெச்இடி நுட்பத்தை பெற்ற 8.52 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 124.9 cc எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 10.54 Nm ஆகும். இதில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக விற்பனையில் இருந்தது.
ஹோண்டா இந்தியா தனது இணையதளத்தில் கிரேசியா 125, டியோ ஸ்போர்ட்ஸ் எடிசன் என இரண்டு மாடல்களையும் நீக்கியுள்ளது. டியோ 110 மாடலே புதிய மாற்றங்களை பெற்று அலாய் வீல் கொண்டதாக அறிமுகம் செய்யப்படது.
டியோ 110 வெற்றியை தக்கவைத்துக் கொள்ள 125சிசி பிரிவிலும் டியோ பிராண்டை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது.