இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஹோண்டா CBR650F பைக் அந்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. புதிய ஹோண்டா CBR650R விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது.
ஹோண்டா CBR650F பைக்
சமீபத்தில் நடைபெற்ற EICMA 2018 மோட்டார் வாகன கண்காட்சியில் வெளியிடப்பட்ட ஹோண்டா CBR650F பைக்கிற்கு மாற்றான ஹோண்டா CBR650R பைக் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டிருக்கும் காரணத்தால் இந்த பைக் மாடல் நீக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.
மேம்பட்ட 650சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 85.42 BHP குதிரை திறன் மற்றும் 60.5 Nm டார்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருந்தது.
முந்தைய வடிவமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களுடன் மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கின்றது. CBR1000RR ஃபயர்பிளேட் மாடலின் வடிவ அம்சங்களை பெற்றதாக புதிய சிபிஆர் 650எஃப் அமைந்துள்ளது. எல்இடி முகப்பு விளக்குகளுடன் கூர்மையான ஃபேரிங் பேனல்களை பெற்றிருந்தது.
இந்த பைக் மாடல் தற்போது ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா இணையதளத்தில் நீக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா CBR650R பைக்
இரட்டை பிரிவு எல்இடி விளக்குகளை கொண்ட ஹோண்டா CBR650R பைக்கில் மிகவும் சக்திவாய்ந்த 650சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 95 BHP குதிரை திறன் மற்றும் 60.5 Nm டார்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் சிலிப்பர் கிளட்ச் இடம்பெற்றிருக்கிறது.
41 mm கொண்ட Showa Bending Valve ஃபோர்க்குளை பெற்றதாகவும் பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பர் கொண்டதாக வந்துள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற புதிய பைக்கில் முன்புறத்தில் இரட்டை டிஸ்க் கொண்ட 310மிமீ பிரேக் பெற்றிருப்பதுடன் பின்புறத்தில் 240மிமீ ஒற்றை டிஸ்க் பிரேக்கினை கொண்டுள்ளது.
ஹோண்டா சிபிஆர்650ஆர் பைக் விலை ரூ. 7.50 லட்சத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் ஹோண்டா நிறுவனம் இந்த பைக் அதிகார்வப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இந்திய சந்தையில் ஹோண்டா சிபி300ஆர் பைக்கிற்கான முன்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5000 செலுத்தி ஹோண்டா விங் ஷோரூம்களில் முன்பதிவு மேற்கொள்ளலாம். இந்த பைக்கின் விலை ரூ.2.50 லட்சத்துக்குள் அமைந்திருக்கும்.