2024 பாரத் மொபைலிட்டி ஷோவில் ஹோண்டா CB300F ஃபிளெக்ஸ் ஃப்யூவல் பைக்கில் எத்தனால் 85% எரிபொருளை கொண்டும் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மாடல் காட்சிக்கு வந்துள்ளது.
பிரேசில் சந்தையில் ஹோண்டா பல்வேறு மாடல்களை எத்தனால் எரிபொருள் மூலம் இயங்கும் வகையில் விற்பனை செய்து வருகின்றது.
Honda CB300F Flex Fuel
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டாவின் CB300F FFV மாடலில் 293cc, ஆயில் கூல்டு, 4 ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர், PGM-Fi என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 24.5PS மற்றும் 25.6Nm டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜினில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் ஸ்லிப்பர் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது. என்ஜின் பவர் மற்றும் டார்கில் எந்த மாற்றங்களும் இல்லை.
சிபி 300எஃப் பைக்கில் அப்சைடு டவுன் ஃபோர்க்கு மற்றும் பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷனையும் பயன்படுத்துகிறது. இந்த மாடலின் முன்புறத்தில் 276 mm டிஸ்க் மற்றும் 220 mm டிஸ்க் கொண்டு இரட்டை சேனல் ஏபிஎஸ் உள்ளது.
ஹோண்டா நிறுவனம் பவர் பேக் எக்ஸ்சேஞ் மற்றும் பென்லி.இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பல்வேறு இந்திய தயாரிப்பாளர்கள் 85 % எத்தனால் மூலம் இயங்கும் வகையில் தயாரித்து வருகின்றது. குறிப்பாக ஹீரோ, ராயல் என்ஃபீல்டு, சுசூகி மற்றும் டிவிஎஸ், பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்களும் காட்சிப்படுத்தியுள்ளது.