500சிசி அட்வென்ச்சர் ரக மாடலான CB500X பைக்கின் உந்துதலில் வடிவமைக்கப்பட்டுள்ள ஹோண்டா நிறுவனத்தின் CB200X மாடலின் என்ஜின் உட்பட பெரும்பாலான உதிரிபாகங்கள் விற்பனையில் உள்ள ஹார்னெட் 2.0 பைக்கிலிருந்து பெறப்பட்டுள்ளது.
சிபி 200 எக்ஸ் என்ஜின் விபரம்
முன்பாக விற்பனையில் கிடைத்து வருகின்ற ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் உள்ள 184சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு PGM-FI HET (Honda Eco Technology) இன்ஜின் 8500 RPM சுழற்சியில் 17.03 ஹெச்பி பவர் மற்றும் 6000 RPM சுழற்சியில் 16.1 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
ஹார்னெட் 2.0 பைக்கிலிருந்து என்ஜின் உட்பட சஸ்பென்ஷன், கிரவுண்ட் கிளியரன்சில் கூட மாற்றங்கள் இல்லாமல் அமைந்துள்ளது. இரு மாடல்களும் 17 அங்குல வீல் பெற்று கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்ட யூஎஸ்டி ஃபோர்க்கு கவர்ச்சிகரமாக விளங்குவதுடன், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது.
முழுமையான எல்இடி ஹைட்லைட் உடன் டர்ன் பை டர்ன் இன்டிகேட்டர் நக்கல் கார்டில் சேர்க்கப்பட்டு, 167 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டு 147 கிலோ எடையை பெற்றுள்ளது.
ஹார்னெட் 2.0 பைக்கில் உள்ள அதே கிளஸ்ட்டர் அமைப்பினை பெற்றுக் கொண்டுள்ள பகல், இரவு நேரங்களில் தெளிவாக காட்சிக்கு கிடைக்கும் வகையில் நெகட்டிவ் எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு கியர் பொசிஷன் இன்டிகேட்டர், சர்வீஸ் இண்டிகேட்டர், பேட்டரி இருப்பினை அறியும் வசதி இடம்பெற்றுள்ளது.
CB200X மாடலில் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு, முன்புறத்தில் 276 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா CB200X பைக்கின் விலை ரூ.1.45 லட்சம் ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ஹார்னெட் 2.0 மாடலை விட ரூ.11,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது. மேலும் மிக சிறப்பான ஆஃப் ரோடுஅனுபவத்தினை வழங்குகின்ற போட்டியாளரான ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விலை ரூ.1.21 லட்சம் ஆகும்.
(அனைத்தும் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை)