பிரபலமான 125சிசி ரக ஹோண்டா சிபி ஷைன் பைக் மாடலின் லிமிடெட் எடிஷன் விலை ரூபாய் 62,234 தொடக்க விலையில் வெளியிடப்பட்டுள்ளது. தோற்ற மாற்றங்களை மட்டும் இந்த எடிஷன் கொண்டுள்ளது.
ஆக்டிவா 5ஜி லிமிடெட் எடிஷன் போன்றே இந்த பைக்கில் டூயல் டோன் நிறத்தை கொண்டுள்ளது. விற்பனையில் உள்ள சாதாரன மாடலை விட ரூ.400 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஹோண்டா சிபி ஷைன்
டூயல் டோன் என இரு விதமான கலவை பெற்ற நிறத்தை கொண்டுள்ள சிபி சைன் பைக்கினில் கருப்பு நிறத்துடன் சிவப்பு மெட்டாலிக், கருப்பு நிறத்துடன் சில்வர் மெட்டாலிக் போன்றவற்றை கொண்டதாக அமைந்திருக்கும். சிறப்பு எடிசனில் வைஷர், டேங்க், கவுல் பேனல் போன்றவற்றில் பாடி கிராபிக்ஸ் மட்டும் புதிதாக பெற்றுள்ளது
இந்த பைக்கில் எவ்விதமான மெக்கானிக்கல் மற்றும் என்ஜின் மாற்றங்கள் இல்லாமல் வெளிவந்துள்ளது. சிறப்பு எடிசனில் தொடர்ந்து 10.16 பிஹெச்பி பவரையும், 10.30 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 125 சிசி ஏர் கூல்டு ஒற்றை சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது சிபி ஷைன் பைக்கில் பவரை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இரு டயரிலும் டிரம் பிரேக் , மற்றும் டிஸ்க் பிரேக் என இரு மாறுபட்ட வேரியன்டில் கிடைக்கின்ற இரு வேரியன்டிலும் லிமிடெட் எடிஷன் வெளியாகியுள்ளது.
ஹோண்டா CB ஷைன் டிரம் பிரேக் லிமிடெட் எடிஷன் விலை ரூ. 62,234 மற்றும் ஹோண்டா CB ஷைன் டிஸ்க் லிமிடெட் எடிஷன் விலை ரூ.66,894 என (விற்பனையக விலை சென்னை) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.