ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின், ஹோண்டா சிபி ஷைன் மற்றும் சிபி ஷைன் எஸ்பி டிரம் பிரேக் மாடல்களில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் எனப்படுகின்ற சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
டிஸ்க் பிரேக் பெற்றிருக்கின்ற சிபி ஷைன் மற்றும் சைன் எஸ்பி மாடல்களில் முன்பே சிபிஎஸ் இணைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள சிபிஎஸ் அல்லது ஏபிஎஸ் கட்டாய நடைமுறைக்கு முன்னதாக சிபிஎஸ் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.
10.57 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 124.7சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 10.3 என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. எச்இடி நுட்பத்துடன் ஷைன் எஸ்பி பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 65கிமீ ஆகும்.
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பின்புறத்தில் இரண்டு சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது. மேலும் முன்பக்கத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக் ஆப்ஷனல் மற்றும் பின் மற்றும் முன் டயரில் 130மிமீ டிரம் பிரேக்கினை கொண்டுள்ளது. மேலும் ஈக்வலைஸர் கொண்ட காம்பி பிரேக் அமைப்பினை அனைத்து வேரியண்டிலும் கொண்டுள்ளது.
இந்தியாவின் 125சிசி சந்தையின் டூ வீலர் நாயகனாக திகழும் சிபி ஷைன் பைக் மாடல் விற்பனை எண்ணிக்கை 70 லட்சத்துக்கு அதிகமாக செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாத முடிவில் 70 லட்சம் இலக்கை கடந்திருந்தது.
Variant | ஹோண்டா சிபி ஷைன் | சிபி ஷைன் எஸ்பி |
Drum | ரூ. 60,246 | ரூ. 65,503 |
Drum CBS | ரூ. 60,805 | ரூ. 66,062 |
Disc | ரூ. 62,559 | ரூ. 67,946 |
Disc CBS | ரூ. 65,465 | ரூ. 69,902 |
சென்னை விற்பனையக விலை பட்டியல் ஆகும். இவற்றில் இடம்பெற்றுள்ள சிபிஎஸ் அல்லாத மாடல்கள் மார்ச் 31, 2019 வரை மட்டும் கிடைக்கும்.