இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா CB ஹார்னெட் 160R மற்றும் ஹோண்டா CBR250R பைக்குகளின் விலை ரூ.559 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு அனைத்து வேரியண்டுகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஹார்னெட் 160ஆர் மற்றும் பிஎஸ் 4 CBR250R பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றது.
ஹோண்டா CB ஹார்னெட் 160R
சமீபத்தில் அறிமுகம் செய்யபட்ட மேம்படுத்தப்பட்ட ஹோண்டா CB ஹார்னெட் 160R பைக்கில் கூடுதலாக எல்இடி ஹெட்லைட், பாடி கிராபிக்ஸ் ஆகியவற்றுடன் ஸ்டைலிஷான கிளஸ்ட்டர் உட்பட மிக நேர்த்தியான கட்டமைப்பினை தொடர்ந்து வெளிப்படுத்துகின்றது. புதிய ஹோண்டா ஹார்னெட் 160 ஆர் மாடலில் சிபிஎஸ் பிரேக் சிஸ்டம் உட்பட கூடுதலாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக வழங்கப்பட்டுள்ளது.
சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கில் உள்ள இன்ஜினை பெற்று 14.90 ஹெச்பி பவருடன், டார்க் 14.50 என்எம் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. சிபி ஹார்னெட் 160ஆர் பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 58.95 கிமீ ஆகும்.
2018 ஹோண்டா சிபி ஹார்னெட் 160R பைக் விலை
ஹோண்டா சிபி ஹார்னெட் 160R டிரம் – ரூ.84,234
ஹோண்டா சிபி ஹார்னெட் 160R டிஸ்க் CBS – ரூ.88,734
ஹோண்டா சிபி ஹார்னெட் 160R ABS STD – ரூ.89,734
ஹோண்டா சிபி ஹார்னெட் 160R ABS DLX – ரூ.92,234
{அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை விபரம் }
சிபிஆர் 250ஆர்
தோற்ற அமைப்பில் புதுவிதமான பாடி கிராபிக்ஸ் பெற்று முகப்பு அமைப்பில் புதிய எல்இடி ஹெட்லைட் பெற்றதாக வந்துள்ள சிபிஆர் 250ஆர் பைக்கில் நான்கு விதமான கிரே-ஆரஞ்சு, கிரே-பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெக்கானிக்கல் அமைப்புகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாமல், பிஎஸ்-3 எஞ்சினுக்கு மாற்றாக மேம்படுத்தப்பட்ட 249.6 சிசி பாரத் ஸ்டேஜ் 4 எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 26.5hp ஆற்றல் மற்றும் 22.9Nm இழுவைத் திறன் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
அப்சைடு ஃபோர்க்கினை முன்புறத்தில் பெற்று பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரை கொண்டதாக வந்துள்ள இந்த பைக்கில் முன்புறத்தில் 296 மீமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ டிஸ்க் பிரேக் கொண்டதாக வந்துள்ளது. மேலும் இந்த பைக்கில் ஆப்ஷனாலாக டூயல்-சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்றதாக கிடைக்கின்றது. 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டுள்ள இந்த பைக்கின் எடை 167 கிலோ ஆகும்.
2018 ஹோண்டா CBR 250R விலை பட்டியல்
CBR 250R STD – ரூ. 1,66,597 லட்சம்
CBR 250R ABS – ரூ. 1,96,120 லட்சம்
(எக்ஸ்-ஷோரூம் சென்னை)