ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஹைனெஸ் பிராண்டு வரிசையில் CB 350 RS ஸ்கிராம்ப்ளர் பைக் விற்பனைக்கு ரூ.1.96 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. சிபி 350 பைக்கின் பெரும்பாலான பாகங்களை பகிர்ந்து கொண்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு, ஜாவா, பெனெல்லி இம்பீரியல் 400 ஆகிய மாடல்களுக்கு சவாலாக விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஹைனெஸ் சிபி 350 பைக்கின் மொத்த விற்பனை எண்ணிக்கை 10,000 கடந்துள்ள நிலையில் அடுத்த சிபி 350 ஆர்எஸ் வெளியாகியுள்ளது.
CB 350 RS இன்ஜின் சிறப்புகள்
ஹைனெஸ் சிபி 350 பைக்கில் உள்ள 348.36சிசி லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 5500 RPM-ல் 20.8 பிஹெச்பி பவர் மற்றும் 3000 RPM-ல் 30 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்ற இன்ஜினில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
பிரத்தியேகமான கிளஸ்ட்டரில் ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி மூலம் ஸ்மார்ட்போன் இணைப்பினை ஏற்படுத்தி அழைப்புகள், மியூசிக், நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளுடன் டிரிப் மீட்டர், ரியல் டைம் மைலேஜ் அறியும் வசதி, சராசரி மைலேஜ், எரிபொருள் இருப்பினை அறியும் வசதி, கியர் பொசிஷன் இன்டிகேட்டர், பேட்டரி வோல்ட் மீட்டர் ஆகியவற்றை கொடுத்துள்ளது.
இந்த மாடலின் முன்புற டயரில் 310 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் உட்பட முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா H’ness CB 350 RS விலை
Honda H’Ness CB 350 RS – ரூ.1.96 லட்சம்
(எக்ஸ்ஷோரூம்)