இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஆக்டிவா பெயரில் 110சிசி ICE மாடலுக்கு இணையான செயல்திறன் மற்றும் பல்வேறு நவீன வசதிகள் கொண்டதாகவும் விளங்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.
தற்பொழுது சந்தையில் உள்ள 110cc பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடுக்கும் வகையிலும், அதே நேரத்தில் போட்டியாளர்களான ஓலா, ஏதெர், டிவிஎஸ், பஜாஜ் சேட்டக், வீடா உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்திருப்பதுடன் நிலையான பேட்டரி (Fixed Battery Tech) கொண்டிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா இந்திய சந்தையின் துவக்கநிலை மற்றும் அதிக வாடிக்கையாளர்களை பெற்றிருக்கும் சந்தையில் கூட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்காத நிலையில், எலெக்ட்ரிக் வாகன சந்தையில் உள்ள போட்டியாளர்கள் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை வழங்கி வரும் நிலையில் ஆக்டிவா எலெகட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி அம்சங்களை கண்டிப்பாக பெற்றிருக்கும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வளரும் நாடுகளுக்கு உருவாக்கப்பட்டு வருகின்ற ஆக்டிவா எலெக்ட்ரிக் ஜப்பானில் உள்ள ஹோண்டாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தால் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஹோண்டாவின் ஆக்டிவா எலெகட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகலாம்.