இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா இ (Activa e:) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் QC1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என இரண்டு விதமான ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. ஆக்டிவா-இ மாடல் ஆனது பேட்டரி ஸ்வாப் நுட்பத்தை கொண்டதாக அமைந்திருக்கின்றது கியூசி1 மாடல் ஃபிக்ஸ்டு பேட்டரி அமைப்பினை பெற்றுள்ளது.
பேட்டரி ஸ்வாப் முறையில் இரண்டு பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வகையில் 1.5Kwh பேட்டரி ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது .இதனை பேட்டரி தீர்ந்து விட்டால் உடனடியாக ஹோண்டா ஸ்லாப் மையத்தில் மாற்றிக் கொள்ளலாம் அல்லது சார்ஜிங் செய்து கொள்ளலாம்.
Honda Activa e: scooter
நீலம், ஷேலோ நீலம், வெள்ளை, கருப்பு, மற்றும் சில்வர் மெட்டாலிக் என 5 நிறங்களை கொண்டுள்ள ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1.5Kwhx2 லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டு 6KW பவரை வழங்கும் PMSM மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 22 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.
முழுமையான சிங்கிள் சார்ஜில் IDC முறைப்படி 102 கிமீ வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் சர்வதேச அளவில் இந்த பேட்டரி கொண்ட மாடல் 70 முதல் 80 கிமீ என குறிப்பிடப்பட்டுள்ளது.
Econ, Standard, மற்றும் Sport என மூன்று மோடுகளை பெற்றுள்ள நிலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ ஆக உள்ளது. இந்த மாடலின் ஒட்டுமொத்த எடை 119 கிலோ ஆகும்.
7 அங்குல TFT கிளஸ்ட்டர் பெற்று RoadSync Duo மூலம் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வாயிலாக அழைப்புகளை ஏற்க, நிராகரிக்க மற்றும் நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்களும் பெற்றிருக்கும்.
விலை ஜனவரியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஜனவரி 1 முதல் முன்பதிவு துவங்கப்பட்டு டெலிவரி மார்ச் 2025 முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. முதற்கட்டமாக ஆக்டிவா இ மாடல் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதி, பெங்களுரூ மற்றும் மும்பை நகரங்களில் கிடைக்க உள்ளது.
ஹோண்டா பெங்களூரு முழுவதும் 84 ஸ்வாப் ஸ்டேஷன்களை நிறுவியுள்ள நிலையில் ஆக்டிவா பிராண்ட் தற்போதுள்ள ரெட் விங் டீலர்ஷிப்களைப் பயன்படுத்தும். ஃபிக்ஸ்டு பேட்டரி நாடு முழுவதும் கிடைக்கும் உள்ள அனைத்து டீலர்களிடம் கிடைக்கும்.