ஹோண்டா டூ வீலர் இந்தியா நிறுவனத்தின் புதிய க்யூசி1 மற்றும் ஆக்டிவா இ என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தற்போது துவங்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு கட்டணமாக ரூபாய் ஆயிரம் வசூலிக்கப்படுகின்றது.
தமிழ்நாட்டில் எந்தவொரு நகரத்திலும் தற்பொழுது முன்பதிவு துவங்கப்படவில்லை, எனவே அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோண்டாவின் டீலர்கள் மூலம் ஆக்டிவா இ ஸ்கூட்டருக்கு பெங்களூரு, டெல்லி, மும்பை என மூன்று நகரங்களில் மட்டும் கிடைக்க உள்ள நிலையில் க்யூசி1 மாடல் கூடுதலாக புனே, சண்டிகர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட மாநகரங்களில் மட்டுமே தற்பொழுது முன்பதிவு நடைபெற்று வருகின்றது.
ஐந்து விதமான வண்ணங்களை பெறுகின்ற இந்த ஸ்கூட்டரை பொருத்தவரை ஆக்டிவா இ மாடல் ஆனது இரண்டு 1.5Kwh பேட்டரிகளை கொண்டு ஸ்வாப் டெக்னாலஜியுடன் ஹோண்டா மொபைல் பவர் பேக் இ மூலம் பேட்டரி ஸ்வாப்பிங் செய்யப்பட உள்ளது. இதில் அதிகபட்ச ரேஞ்ச் 102 கிலோமீட்டர் வரை கிடைக்கும் என கூறப்படுகின்றது.
அடுத்தபடியாக குறைந்த ரேஞ்ச் வெளிப்படுத்துகின்ற QC1 மாடல் ஒற்றை 1.5Kwh பெற்று இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிலோமீட்டர் ஆக வரையறுக்கப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 80 கிலோமீட்டர் ரேஞ்ச் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த மாடலில் கூடுதலாக இருக்கைக்கு அடியிலான ஸ்டோரேஜ் வசதி 26 லிட்டர் கொள்ளளவு கொண்டிருக்கின்றது.
ஹோண்டாவின் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான விலை தற்பொழுது அறிவிக்கப்படவில்லை. ஜனவரி 17ல் துவங்க உள்ள பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ அரங்கில் அனேகமாக விலை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.