இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா எலெக்ட்ரிக் மற்றும் க்யூசி1 என இரண்டு ஸ்கூட்டர் விலை அறிமுகம் செய்துள்ள நிலையில் இரண்டு மாடல்களும் வெவ்வேறு விதமான நுட்ப விபரங்களை பெற்று வித்தியாசப்படுகின்றது. இவற்றை தமிழ்நாட்டில் எப்பொழுது எதிர்பார்க்கலாம் மற்றும் எங்கே வாங்கலாம் போன்ற முக்கிய விபரங்கள் தற்பொழுது அறிந்து கொள்ளலாம்.
ஜனவரி 1, 2025 முதல் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவை ஹோண்டா 2 வீலர் துவங்க உள்ளது.
ஆக்டிவா இ மாடல் ஆனது பேட்டரி ஸ்வாப் ஸ்டேஷன்களை (Honda e: Swap) நம்பியே பயணிக்க வேண்டி இருக்கும் ஏனென்றால் இது முழுமையாக பேட்டரியை ஸ்வாப் செய்து கொள்ளும் வகையிலே வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. நேரடியாக சார்ஜ் செய்து கொள்ளும் ஆப்ஷன் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் 2 நிமிடத்திற்கு குறைந்த நேரத்திலே பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம்.
முதற்கட்டமாக பெங்களூருவில் 2025 பிப்ரவரி முதல் துவங்க உள்ள இந்த மாடலுக்கான டெலிவரி டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகள், மும்பை ஆகிய நகரங்களில் ஏப்ரல் 2025 முதல் கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை உள்ளிட்ட எந்த ஒரு பகுதிகளிலும் எப்பொழுது கிடைக்கும் என்று உறுதியான தகவல் வெளியாகவில்லை, என்றாலும் ஹோண்டாவின் பிக்விங் டீலர்களில் பேட்டரி ஸ்வாப் மையங்களை நிறுவிய பிறகு இதற்கான டெலிவரி தொடங்கும் என உறுதியாகி உள்ளதால் அநேகமாக 2025 ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருக்கின்ற பிக்விங் டீலர்கள் வாயிலாக டெலிவரி வழங்கப்படலாம்.
அடுத்து ஃபிக்சட் பேட்டரி முறையை கொண்ட க்யூசி1 மாடல் ஆனது பிப்ரவரி முதலில் பல்வேறு முக்கிய நகரங்களில் தேர்வு செய்யப்பட்டு டெலிவரி வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது மற்றும் உறுதியான நகரங்கள் குறித்து விவரம் வெளியிடவில்லை. இருந்தாலும் இது நிலையான பேட்டரி அம்சம் கொண்டிருப்பதனால் வீட்டிலேயே இலகுவாக சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பதனால் தமிழ்நாட்டின் முன்னணி நகரங்களில் உள்ள பிக்விங் டீலர் வாயிலாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கிடைக்க துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விலை தொடர்பாக எந்த உறுதியான தகவலும் வெளியிடப்படவில்லை இருந்தாலும் பேட்டரி ஸ்பேப் டெக்னாலஜி கொண்டு 102 கிமீ ரேஞ்ச் ஹோண்டா ஆக்டிவா இ மாடல் ஆனது பேட்டரி சப்ஸ்கிரைப் மாதாந்திர கட்டணம் அமைந்திருக்கும் அதே நேரத்தில் ஸ்கூட்டருக்கான விலை தனியாக அறிவிக்கப்படலாம். அடுத்ததாக க்யூசி1 குறைந்த 80 கிமீ ரேஞ்ச் கொண்ட மாடலானது ஒரு லட்சத்திற்கும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.