Bike News ஆன்லைனில் ஹோண்டா ஸ்கூட்டர் மற்றும் பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம் Last updated: 10,July 2020 2:11 pm IST MR.Durai Share பிஎஸ்-6 ஹோண்டா லிவோரூ.1,999 கட்டணத்தில் ஹோண்டா 2 வீலர்ஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளை ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்துக் கொள்ளும் வகையிலான சேவையை துவங்கியுள்ளது.ஹோண்டா இந்தியாவில் ஆக்டிவா 6ஜி, ஆக்டிவா 125, டியோ, கிரேஸியா போன்ற ஸ்கூட்டர்களுடன் லிவோ, சிடி110 ட்ரீம், ஷைன், எஸ்பி 125, யூனிகார்ன் மற்றும் எக்ஸ்பிளேடு போன்ற மாடல்களை கம்யூட்டர் சந்தையில் விற்பனை செய்து வருகின்றது.ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்வோர் தங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் மற்றும் பான் கார்டு எண்ணை பதிவு செய்து முன்பதிவினை மேற்க்கொள்ளலாம். முன்பதிவு கட்டணத்தை டீலர்கள் பெற்றுக் கொண்டு உங்களுக்கான வாகனத்தை விரைந்து விநியோகிக்க உங்களை தொடர்பு கொள்வார்கள். ஒரு வேளை புக்கிங்கை ரத்து செய்ய நேரிட்டால் முழுமையாக கட்டணத்தை திரும்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவிட்-19 பரவலின் காரணமாகவே முன்பே ஹீரோ மற்றும் சுசூகி நிறுவனங்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் விற்பனை துவங்கியுள்ளது. அந்த வரிசையில் தற்போது ஹோண்டாவும் இணைந்துள்ளது. TAGGED:Honda 2wheelers Share This Article Facebook Previous Article ரூ.2,000 வரை சுசூகி ஜிக்ஸர், ஜிக்ஸர் SF விலை உயர்வு Next Article ஹோண்டா லிவோ பிஎஸ்-6 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்