ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்த புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் விற்பனை எண்ணிக்கை போட்டியாளர்களை விட மிக சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக எக்ஸ் பிளேடு மற்றும் ஜிக்ஸர் போன்ற பைக்குகளுக்கு சவாலாக அமைந்திருக்கின்றது.
150சிசி-160சிசி பைக்குகளுக்கான சந்தையில் மிகவும் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் வெளியான எக்ஸ்ட்ரீம் 160ஆர் மாடலின் போட்டியாளர்களாக அப்பாச்சி ஆர்டிஆர் 160, பல்சர் என்எஸ் 160, யமஹா FZ S, எக்ஸ்பிளேடு மற்றும் சுசூகி ஜிக்ஸர் போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது.
அப்பாச்சி வரிசையில் விற்பனை செய்யப்படுகின்ற 160, 180 200 போன்றவற்றின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 33,540 ஆக உள்ளது. சுசூகி ஜிக்ஸர் மாடலின் எண்ணிக்கை 2,817 ஆகவும், ஹோண்டாவின் எக்ஸ்பிளேடு எண்ணிக்கை 5,557 ஆக உள்ளது. மற்றொரு போட்டியாளரான பிரசத்தி பெற்ற யமஹா FZ எண்ணிக்கை 17,868 ஆகும்.
நேரடியான போட்டியாளர்களான ஜிக்ஸர் மற்றும் எக்ஸ் பிளேடு போன்றவற்றை விட கூடுதலான எண்ணிக்கையில் 12,037 ஆக பதிவு செய்துள்ளது.
மாடல் | எண்ணிக்கை |
எக்ஸ்ட்ரீம் 160R | 12,037 |
ஜிக்ஸர் | 2,817 |
எக்ஸ்-பிளேடு | 5,557 |
விலைக்கு ஏற்ற மதிப்பினை வழங்குகின்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனை எண்ணிக்கை பண்டிகை காலத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதனால் மிக சிறப்பான வரவேற்பினை தக்கவைத்து கொள்ள வாய்ப்புள்ளது.