ஹீரோ நிறுவனம் புதிதாக பிரீமியம் ஸ்போர்ட்டிவ் டிசைன் பெற்ற எக்ஸ்டிரீம் 125R மாடலை விறபனைக்கு வெளியிட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டின் ஆன் ரோடு விலை மற்றும் அனைத்து முக்கிய சிறப்பு அம்சங்கள் மற்றும் போட்டியாளர்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
125சிசி சந்தையில் சரிந்து வரும் தனது சந்தை மதிப்பை ஈடுகட்டும் நிலையில் மாறி வரும் சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள எக்ஸ்டிரீம் 125 ஆர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹீரோ எக்ஸ்டிரீம் 125R டிசைன்
மிக முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள ஹீரோ எக்ஸ்டிரீம் 125R பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள எல்இடி ஹெட்லைட் மற்றும் அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள எல்இடி ரன்னிங் விளக்குகள் அமைந்து பைக்கிற்கு ஆக்ரோஷமான அமைப்பினை கொண்டுள்ளது.
ஸ்போர்ட்டிவ் பேனல்களுடன் கூடிய பெரிய பெட்ரோல் டேங்க் மேல் எழும்பிய வகையில் ஸ்பிளிட் இருக்கை அமைப்பினை கொண்டு டயர் ஹக்கர் போன்றவை ஒட்டுமொத்தமாக பைக்கின் தோற்றத்தை கவர்ச்சியாகவும், இளைய தலைமுறையினருக்கு ஏற்றதாகவும் உள்ளது. அனைத்தும் எல்இடி விளக்குகளுகாக கொடுக்கப்பட்டு நெகட்டிவ் எல்சிடி டிஸ்பிளே உள்ளது. கருப்பு, சிவப்பு மற்றும் ப்ளூ என மூன்று நிறங்களை கொண்டுள்ளது.
எக்ஸ்டிரீம் 125R என்ஜின்
மிக நேர்த்தியாக ரிஃபைன்மென்ட் செய்யப்பட்டு ஸ்போர்ட்டிவ் தன்மையை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ள எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் 124.7cc ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 8,250 rpm-ல் 11.40 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.5 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
மிகவும் சிறப்பான முறையில் குறைந்த மற்றும் அதிகபட்ச வேகம் இலகுவாக 80-85 கிமீ எட்டுவதற்கு ஏற்ற வகையில் என்ஜின் ட்யூன் செய்யப்பட்டு மிகவும் சிறப்பான ரைடிங் அனுபவத்தை குறைந்த வேகம் மற்றும் நடுத்தர பிரிவில் வழங்கும் வகையில் அமைந்துள்ளது. 0-60 கிமீ வேகத்தை எட்ட வெறும் 5.9 விநாடிகள் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போட்டியாளரான பல்சர் என்எஸ்125 பைக்கினை விட குறைவான பவரை கொண்டிருந்தாலும் டிவிஎஸ் ரைடர் பைக்கிற்கு இணையாகவும் அமைந்துள்ளது. சிறப்பான மைலேஜ் எதிர்பார்க்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு லிட்டருக்கு 66KMPL வெளிப்படுத்தும் என குறிப்பிட்டாலும், நிகழ்நேரத்தில் அனேகமாக மைலேஜ் லிட்டருக்கு 55-58 கிமீ வரை கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
நெடுஞ்சாலை மட்டுமல்லாமல் சிட்டி ரைடிங்கிற்கு ஏற்ற வகையில் குறைவான ஆர்பிஎம்-ல் அதிகபட்ச டார்க் இலகுவாக கையாளும் வகையில் 136 கிலோ எடை மட்டுமே கொண்டுள்ளது.
சஸ்பென்ஷன், பிரேக்கிங் மற்றும் வசதிகள்
37mm கொண்ட டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் பெற்றுள்ள ஹீரோ எக்ஸ்டிரீம் 125R பைக்கின் பின்பக்கம் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் அப்சார்பர் சிறப்பானதாக ட்யூன் செய்யப்படுள்ளது. குறிப்பாக 125cc சந்தையில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் பெறுகின்ற பைக்கில் 272 mm டிஸ்க் (ABS) அல்லது 240 mm டிஸ்க் (CBS) பெற்று பின்புறத்தில் 130 mm டிரம் பிரேக் கொண்டுள்ளது. ட்யூப்லெஸ் டயர் பெற்றுள்ள முன்பக்கம் 90/90-17 மற்றும் பின்புறத்தில் ரேடியல் டயர் 120/80-17 உள்ளது.
எக்ஸ்டிரீம் 160R 4V மாடலில் உள்ள நெகட்டிவ் எல்சிடி கிளஸ்ட்டரை எக்ஸ்டிரீம் 125ஆர் பைக்கினை பெற்று அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் அறிவிப்புகள் உள்ளிட்ட கனெக்ட்டிவ் வசதிகளை புளூடூத் இணைப்புடன் கூடியதாகவும், கியர் பொசிஷன் இண்டிகேட்டர் ஆகியவற்றை கொண்டுள்ளது.
போட்டியாளர்கள்
125cc சந்தையில் உள்ள பிரசத்தி பெற்ற ஹோண்டா SP125, பஜாஜ் பல்சர் NS125, டிவிஎஸ் ரைடர் 125, பல்சர் 125 ஆகியவற்றுடன் பட்ஜெட் விலை மாடல்களான ஹோண்டா ஷைன் , ஹீரோ கிளாமர் 125 மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் ஆகியவற்றையும் எதிர்கொள்ளுகின்றது.
Hero Xtreme 125R on Road price in Tamil Nadu
வரும் பிப்ரவரி மாதம் மத்தியில் டெலிவரி துவங்க உள்ளதால் முன்பதிவு நடைபெற்று வருகின்றது. இரண்டு விதமான வேரியண்டில் கிடைக்கின்ற ஹீரோ எக்ஸ்டிரீம் 125R பைக்கின் தமிழ்நாடு ஆன் ரோடு விலை ரூ. 1.18 லட்சம் முதல் ரூ.1.23 லட்சம் வரை கிடைக்கின்றது.
Xtreme 125R Variant | Ex-showroom Price | on-road Price |
---|---|---|
Xtreme 125R IBS | ₹ 99,157 | ₹ 1,17,543 |
Xtreme 125R ABS | ₹ 1,04,657 | ₹ 1, 22,565 |
(All price Tamil Nadu)
கொடுக்கப்பட்டுள்ள ஆன்ரோடு விலை தோராயமானதாகும்.