வரும் 23 ஜனவரி 2024 ஆம் தேதி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேவ்ரிக் 440 பைக் உட்பட எக்ஸ்ட்ரீம் 125R மற்றும் ஜூம் 125R ஸ்கூட்டர் என மொத்தமாக மூன்று மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதை நமது தளத்தில் பிரத்தியேகமாக உறுதிப்படுத்துகின்றோம்.
EICMA 2023 அரங்கில் காட்சிக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஜூம் 125ஆர் ஸ்கூட்டரின் சந்தைக்கு வரவுள்ளதால் டிவிஎஸ் என்டார்க், டியோ 125, சுசூகி அவெனிஸ், யமஹா ரே இசட் ஆர் ஆகியவற்றுக்கு சவாலாக விளங்க உள்ளது.
Hero Xtreme 125R
கடந்த ஆண்டு முதல் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் படங்கள் வெளியான நிலையில், தற்பொழுது விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. குறிப்பாக ஹீரோவின் 125சிசி சந்தை சரிந்து வரும் நிலையில் போட்டியாளர்களான டிவிஎஸ் ரைடர், ஹோண்டா எஸ்பி 125, பல்சர் 125 பைக்குகளுக்கு மிக கடுமையான சவால் விடுக்கும் வகையில் ஸ்போர்ட்டிவான டிசைன் மற்றும் எக்ஸ்டெக் கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் பெறக்கூடும்.
எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் பொருத்தப்பட உள்ள என்ஜின் 125cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 11 bhp பவர் மற்றும் 10.6 Nm டார்க் வெளிப்படுத்தலாம். இதில் ஐந்து வேக கியர்பாக்ஸ் இடம்பெறலாம். முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் போர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்று ஸ்பிளிட் இருக்கை, முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் டிரம் பிரேக் கொண்டு, எல்இடி ஹெட்லைட், டெயில் விளக்கு கொண்டிருக்கும்.
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R விலை ரூ.95,000 என துவங்கலாம். இந்த மாடலில் இரண்டு நிறங்கள் பெறக்கூடும்.
Hero Xoom 125
ஏற்கனவே காட்சிக்கு வந்த ஜூம் 125 ஸ்கூட்டரில் 124.6cc என்ஜின் 9.5hp பவர் மற்றும் 10.14Nm டார்க் வழங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். Xoom 125R ஸ்கூட்டரில் முழுமையான எல்இடி ஹெட்லைட், டர்ன் இன்டிகேட்டர், மற்றும் டெயில் லைட்டுகளும் எல்இடி ஆக உள்ளது. முதல்-இன்-செக்வென்ஷியல் எல்இடி இண்டிகேட்டர் பெற்றுள்ளது.
முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் ஹீரோ எக்ஸ்டெக் கனெக்ட்டிவிட்டி போன்ற அம்சங்களுடன் வருகிறது. ஜூம் 125R ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்கும் கொண்டு வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க் கொண்டுள்ளது.
ஹீரோ ஜூம் 125ஆர் பைக்கில் போல்ஸ்டார் ப்ளூ, பிளாக் மற்றும் ரெட் என மூன்று நிறங்களை பெறக்கூடும்.
ஜனவரி 23 ஆம் தேதி ஹீரோ மேவ்ரிக் 440, எக்ஸ்ட்ரீம் 125ஆர், மற்றும் ஜூம் 125 என மூன்று மாடல்களும் எதிர்பார்க்கப்படுகின்றது.