ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பீரிமியம் மாடல்களான வெளியான அட்வென்ச்சர் ரக எக்ஸ்பல்ஸ் 210 மற்றும் ஸ்போர்ட்டிவ் ஸ்டீரிட் ஃபைட்டர் எக்ஸ்ட்ரீம் 250R என இரு மாடல்களின் விலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்பதிவு ஏப்ரல் 20, 2025 முதல் ஹீரோ பிரீமியா டீலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஹீரோவின் ரூ.1.76 லட்சத்தில் வெளியான புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக்கில் 210cc லிக்யூடூ கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு 24.6PS மற்றும் 20.7Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது.
ரூ.1.80 லட்சத்தில் வந்துள்ள புதிய எக்ஸ்ட்ரீம் 250R பைக்கில் 249.03cc லிக்யூடு கூல்டு DOHC 4 வால்வுகள் பெற்ற எஞ்சின் 30 PS பவர் ஆனது 9250 rpm-ல் வெளிப்படுத்துவதுடன் 7250 rpm-ல் 25Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. அசிஸ்ட் மற்றும் சிலிப் கிளட்ச் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
கடந்த ஜனவரி 2025ல் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2025 அல்லது பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு வெளியிப்பட்ட இரு மாடல்களை தவிர ஜூம் 160 மற்றும் ஜூம் 125 ஆகியவற்றையும் அறிமுகம் செய்திருந்தது.