முந்தைய 200சிசி எஞ்சினுக்கு பதிலாக கூடுதல் பவர் மற்றும் மேம்பட்ட சிறப்புகளை கொண்ட 2025 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 அட்வென்ச்சரில் பேஸ் மற்றும் டாப் என இரண்டு விதமாக பெற்று ரூ.1,75,800 முதல் ரூ.1.85,800 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்து வருகின்ற கரீஸ்மா XMR ஃபேரிங் ஸ்டைல் மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே எஞ்சினை பகிர்ந்து கொள்ளுகின்ற புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக்கில் பவர் சற்று மாறுபடுகின்றது. புதிய 210cc அட்வென்ச்சரில் 9,250rpm-ல் 24.6hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.7Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் அசிஸ்ட் உடன் சிலிப்பர் பெற்ற 6 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
அடிப்படையான டிசைனில் சிறிய மாற்றங்களுடன் பல்வேறு ஸ்டைலிஷான மேம்பாடுகளை கொண்டிருப்பதுடன் முழுமையான ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ற வகையில் டபூள் காள்டிள் ஹை டென்சில் ஸ்டீல் ஃபிரேம் கொடுக்கப்பட்டு முன்புறத்தில் 210 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்கு மற்றும் பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் 205 மிமீ வரை பயணிக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
276 மிமீ டிஸ்க் பிரேக்குடன் பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க்கினை பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் மூன்று விதமான மோடுகளை பெற்றுள்ள எக்ஸ்பல்ஸ் 210 பைக்கில் ஸ்போக் வீலுடன் முன்புற டயர் 90/90 – 21 M/C 54H மற்றும் 120/80 – 18 M/C 62 H பின்புற டயரை பெற்றுள்ளது.
220 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டுள்ள இரு வேரியண்டிலும் முழுமையான எல்இடி விளக்குகளை கொண்டுள்ள நிலையில், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட பேஸ் வேரியண்டில் 4.2 அங்குல எல்சிடி கிளஸ்ட்டர் பெற்று கிளேசியர் வெள்ளை, சிவப்பு மற்றும் டாப் வேரியண்ட் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் கூடுதல் உயரத்தை பெற்று நக்கள் கார்ட்ஸ், விண்ட் ஸ்கீரின், லக்கேஜ் பிளேட்டுடன் 4.2″ TFT கிளஸ்ட்டருடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் ப்ளூ மற்றும் சில்வர் என இரு நிறங்களை கொண்டுள்ளது.
- Xpulse 210 Base – ₹ 1,75,800
- Xpulse 210 Top – ₹ 1,85,800
(Ex-showroom)