2019 இஐசிஎம்ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சி அரங்கில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ரேலி கிட் எடிஷனில் சாதரண மாற்றங்களை விட பல்வேறு மாற்றங்களை பெற்றுள்ள இந்த பைக் முழுமையான ஆஃப் ரோடு அனுபவத்தை வழங்க உள்ளது.
ஹீரோ நிறுவனத்தின் அட்வென்ச்சர் ரக மாடலான எக்ஸ்பல்ஸ் அடிப்படையில் ரேலிக்கு ஏற்ற பதிப்பாக ரேலி டயர்கள் பெற்று மிக நேர்த்தியாக கஸ்டமைஸ்டு செய்யப்பட்டு அதிகபட்சமாக 275 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்ற மாடலாக வரவுள்ளது. 200சிசி என்ஜின் பெற்ற இந்த பைக்கில் அதிகபட்சமாக 18.4 ps பவர் மற்றும் 17.1 Nm டார்க் திறனை கொண்டதாக விளங்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
முன்புறத்தில் 12 பற்கள் கொண்ட ஸ்பிராக்கெட் பின்புறத்தில் 40 பற்களை பெற்ற ஸ்பிராக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் இந்த பைக் விற்பனைக்கு கிடைக்கலாம்.