ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ப்ரீமியா டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட உள்ள மேக்ஸி ஸ்டைல் ஜூம் 160 ஸ்கூட்டரின் விலை ரூ.1,48,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த லிக்யூடூ கூல்டு எஞ்சினை பெறுகின்ற இந்த மாடலுக்கு போட்டியாக யமஹா ஏரோக்ஸ் 155 மற்றும் ஏப்ரிலியா SXR160 போன்றவை கிடைக்கின்றன.
Hero Xoom 160
ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரில் மிகவும் சக்திவாய்ந்த 156cc லிக்யூடூ கூல்டு 4 வால்வுகளை பெற்ற ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8,000 rpmல் 14.6 bhp (10.9kW) பவர் மற்றும் 14 Nm டார்க்கினை 6,500 rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இரு பக்க டயரிலும் பொதுவாக 14 அங்குல டயர் பெற்று டிஸ்க் பிரேக்குடன் முன்புறத்தில் 120/70 – 14″ மற்றும் பின்புறத்தில் 140/60 – 14″ டயருடன் டிரம் பிரேக்குடன் இந்த மாடலில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.
முழுமையான எல்இடி விளக்குகளை பெற்று டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பருடன் டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டருடன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் டரன் பை டர்ன் நேவிகேஷன், கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் உள்ளிட்ட வசதிகளுடன் ஸ்மார்ட் கீ வழங்கப்பட்டு பூட் லாக் திறக்கும் வசதியுடன் அமைந்துள்ளது.
பச்சை, வெள்ளை, சிவப்பு மற்றும் கிரே என நான்கு விதமான நிறங்களை பெற்று ஒற்றை வேரியண்ட் பெறுகின்ற ஜூம் 160 மாடல் 155 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் உடன் 7 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டுள்ளது.
ஹீரோவின் ப்ரீமியா டீலர்கள் மூலம் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள ஜூம் 160க்கு முன்பதிவு பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்டு விநியோகம் மார்ச் 2025 முதல் மேற்கொள்ளப்பட உள்ளது.