ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் மேக்ஸி ஸ்கூட்டர் மாடலாக EICMA 2023 அரங்கில் வந்துள்ள ஜூம் 160 ஸ்கூட்டரில் லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு, கீலெஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது.
உற்பத்தி நிலையை எட்டியுள்ள இரு பிரிவுகளை கொண்ட எல்இடி ஹெட்லைட் உள்ள ஜூம் 160 ஸ்கூட்டரை விற்பனைக்கு அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கின்றது.
Hero Xoom 160
ADV ஸ்டைலை கொண்ட ஹீரோ Xoom 160 ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள புதிய லிக்யூடு கூல்டு 156cc, ஒற்றை சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 14hp பவர் மற்றும் 6,500rpm-ல் 13.7Nm டார்க் வழங்குகின்றது. ஹீரோவின் காப்புரிமை பெறப்பட்ட i3s ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பம் மற்றும் ஒரு சைலண்ட் ஸ்டார்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
141 கிலோ எடை கொண்ட ஜூம் 160 ஸ்கூட்டரின் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது. இருபக்கமும் 14-இன்ச் வீல் உடன் இருவிதமான பயன்பாடுக்கு ஏற்ற டயர் உள்ளது.
ஜூம் 160 ஸ்கூட்டரில் கீலெஸ் இக்னிஷன், முழு டிஜிட்டல் டேஷ்போர்டு மூலம் ப்ளூடூத் இணைப்பினை கொண்டு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளுடன் ரிமோட் கீ வழங்கப்பட்டு இருக்கை திறக்க, என்ஜின் ஸ்டார்ட் செய்ய உதவுகின்றது.
2024 ஆம் ஆண்டின் மத்தியில் ஹீரோ ஜூம் 160 ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியிடப்படலாம். ஹீரோ மோட்டோகார்ப் ஐக்மா 2023 அரங்கில் ஜூம் 125 ஆர் ஸ்கூட்டர், ஹீரோ 2.5ஆர் ஸ்டன்ட் கான்செப்ட் மற்றும் வீடா எலக்ட்ரிக் டிர்ட் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.