ஹீரோ நிறுவனத்தின் 125சிசி சந்தையில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஜூம் 125 மற்ற போட்டியாளர்களை விட 0-60 கிமீ வேகத்தை வெறும் 7.6 வினாடிகளில் எட்டும் திறனை கொண்டிருப்பதனால் மிக வேகமான ஸ்கூட்டர் என்ற பெருமையுடன் ரூ.86,900 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட ஜூம் 125ஆர் அடிப்படையில் உற்பத்திக்கு வந்துள்ள புதிய ஜூம் 125சிசி ஸ்கூட்டரில் 7,250 rpmல் 9.78 hp பவர் ( 7.3 kW) மற்றும் 10.4 Nm டார்க்கினை 6,000 rpmல் வெளிப்படுத்தும் நிலையில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.
குறிப்பாக இந்த சந்தையில் உள்ள மற்ற போட்டியாளர்களான டியோ 125, அவெனிஸ் 125 மிக முக்கியமான டிவிஎஸ் என்டார்க் 125 ஆகியவற்றுக்கும் கடும் சவாலினை ஏற்படுத்துவதுடன் மிக வேகமான ஸ்கூட்டராகவும், 14 அங்குல வீல் கொண்டுள்ள மாடலில் முன்புறத்தில் டிஸ்க் அல்லது டிரம் பிரேக் ஆப்ஷனுடன் மற்றும் பொதுவாக பின்புறத்தில் டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் அமைந்துள்ளது.
ZX மற்றும் VX என இருவிதமான வேரியண்டடை பெற்று டாப் ஜூம் 125 ZX வேரியண்டில் லைம், ப்ளூ, ரெட் மற்றும் கிரே என நான்கு நிறங்களுடன் மெசின் ஃபினிஷ்டூ அலாய் வீலுடன் முன்புறத்தில் டிஸ்க், டிஜிட்டல் கிளஸ்ட்டரில் கனெக்ட்டிவிட்டி வசதிகள், முன்புற அப்ரானில் ஸ்டோரேஜ், பூட் லைட் மற்றும் எல்இடி சிக்யூன்செல் விளக்குகளை பெற்றுள்ளது.
குறைந்த விலை ஜூம் 125யின் VX வேரியண்டில் கிரே , ப்ளூ என இரு நிறங்களை மட்டும் கொண்டு சாதாரன கேஸ்ட் அலாய், டிரம் பிரேக் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.
Xoom 125 VX – ₹ 86,900
Xoom 125 ZX – ₹ 92,900
(ex-showroom)
வரும் பிப்ரவரி 2025 முதல் முன்பதிவு அனைத்து ஹீரோ டீலர்களிலும் துவங்கப்பட்டு டெலிவரி மார்ச் முதல் வழங்கப்பட உள்ளது.