ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்ற வீடா எலக்ட்ரிக் பிராண்டில் மறைமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வீடா Z மாடல் இந்தியா மட்டுமல்லாமல் இங்கிலாந்து, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச சந்தைகளுக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வீடா Z எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் கொடுக்கப்பட்டிருக்கின்ற பேட்டரி 2.2Kwh முதல் 4.4Kwh வரை வழங்கப்பட்டு இது ஸ்வாப்பிங் முறையில் மிக இலகுவாக மாற்றிக் கொள்ளும் முறை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இலகுவாக பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலின் ரேஞ்ச் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விபரங்கள் தற்பொழுது வெளியிடப்படவில்லை, உடனடியாக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும், வருகின்ற 2025 ஆம் ஆண்டில் தொடக்க மாதங்களில் பல்வேறு வெளிநாடுகளில் இந்த மாடல் விற்பனைக்கு வெளியாகியுள்ள நிலையில் இந்திய சந்தையிலும் கிடைக்க உள்ளது.
ஃபேமிலி சாய்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போல் அமைந்திருக்கின்ற இந்த வீடா இசட் மாடலை பொருத்தவரை பல்வேறு பாகங்கள் விற்பனையில் உள்ள வீடா வி1 பிளஸ் மற்றும் வி1 ப்ரோ போன்ற மாடல்களில் இருந்து பகிர்ந்து கொள்கின்றன. குறிப்பாக முன்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஹெட்லைட் மற்றும் பேட்டரி மற்றும் பிஎம்எஸ்எம் மோட்டார் போன்றவை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்கூட்டரில் டிஎஃப்டி கன்சோல், வாகனத்தின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் திறன், திருட்டு எச்சரிக்கைகள், ஜியோஃபென்சிங் மற்றும் வாகன அசையாமை போன்ற அம்சங்கள் இருக்கும். ஸ்கூட்டருக்கு OTA (ஒவர்-தி-ஏர்) மூலம் புதுப்பிப்புகளும் கிடைக்கும், இது உரிமையாளர்கள் ஷோரூமிற்குச் செல்லாமல் தங்கள் ஸ்கூட்டர்களைப் புதுப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹீரோ வீடா ஜீ ஸ்கூட்டரின் விலை ஆரம்ப நிலை மாடல் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் குறைவாக துவங்கலாம்.