ஹீரோவின் விடா எலக்ட்ரிக் பிராண்டில் வரவிருக்கும் புதிய ஜீ எலக்ட்ரிக் கூட்டல் மாடல் இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளதால் அடுத்த சில மாதங்களுக்குள் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
EICMA 2024ல் Z என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்ட மாடல் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு இருக்கின்றது. குறிப்பாக ஐரோப்பாவில் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த மாடல் அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது.
தற்பொழுது சந்தையில் உள்ள விடா வி2 ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி உட்பட அடிப்படையான டிஎஃப்டி கிளஸ்ட்டர் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புள்ளது. எனவே, ஜீ ஸ்கூட்டரில் 2.2Kwh, 3.44Kwh, 3.94kwh மற்றும் டாப் வேரியண்டில் 4.44Kwh என நான்கு விதமான ஆப்ஷனை கொண்டு விடா ஜீ ரேஞ்ச் அனேகமாக 100 கிமீ முதல் 200 கிமீ வரை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் சிங்கிள் ஷாக் சஸ்பென்ஷன் பின்புறத்தில் கொடுக்கப்பட்டு, 12 அங்குல அலாய் வீல் பெற்று முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பெற்றிருக்கலாம்.
புதிய விடா ஜீ விற்பனைக்கு அடுத்த சில மாதங்களுக்குள் சந்தைக்கு ரூ.90,000 முதல் ரூ.1.60 லட்சத்துக்குள் அமையலாம்.