ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் பிராண்டில் உள்ள V1 புரோ மற்றும் V1 பிளஸ் வேரியண்டுகளில் FAME-II மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து விடா V1 plus மாடல் நீக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்திய அரசு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான FAME 2 மானியம் திட்டத்தில் ஒரு kwh பேட்டரிக்கு ரூ.15,000 ஆக இருந்த மானியத்தை ரூ.10,000 ஆக குறைத்தது. இதன் காரணமாக விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலையை ரூ.6,000 வரை உயர்த்தியுள்ளது.
Hero Vida V1 Plus
குறைந்த விலையில் கிடைத்து வந்த வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வி1 பிளஸ் மின்சார ஸ்கூட்டர் மாடல் 3.44kWh பேட்டரியைப் பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 85 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்ட வேரியண்ட் நீக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது விடா வி1 புரோ வேரியண்ட் 3.94kWh பேட்டரியைப் பெற்றுள்ளது. இதன் ரேஞ்சு 110 கிமீ வரை கிடைக்கும். 7-இன்ச் டச்ஸ்கிரீன் TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
Vida Specification | V1 Pro |
Battery pack | 3.94 kWh |
Top Speed | 80 Km/h |
Range (IDC claimed) | 165 km |
Real Driving Range | 110 km |
Riding modes | Sport, Ride, Eco, Custom |
2023 ஹீரோ விடா V1 புரோ – ₹ 1,45,900 (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)
தமிழ்நாட்டில் சென்னை, கோவை மாநகரங்களில் விடா ஸ்கூட்டர் கிடைக்கின்றது. படிப்படியாக 100க்கு மேற்பட்ட நகரங்களில் நாடு முழுவதும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.