ஹீரோவின் வீடா எலக்ட்ரிக் பிராண்டு சர்வதேச சந்தையில் V1 Pro மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்கு வெளியிடப்படுவதுடன் கூடுதலாக வி1 புரோ கூபே ஸ்டைல் எனப்படுகின்ற ஒற்றை இருக்கை வேரியண்டும் நவம்பர் 7 ஆம் தேதி துவங்க உள்ள EICMA 2023 அரங்கில் வெளியாக உள்ளது.
இந்திய சந்தையில் தற்பொழுது குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கின்ற வி1 புரோ ஸ்கூட்டர் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சாக 110 கிமீ ரேஞ்சு வழங்குகின்றது.
Hero Vida Escooter
தற்பொழுது விற்பனையில் உள்ள விடா V1 Pro மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சற்று பெரிய 3.94kWh பேட்டரியைப் பெற்றுள்ளது. இதன் ரேஞ்சு 95 கிமீ -110 கிமீ வரை கிடைக்கும். விடா மாடலை சர்வதேச சந்தைக்கு அறிமுகம் செய்வதனை தவிர , ஹீரோ நிறுவனம் புதிய விடா எலக்ட்ரிக் பைக் மாடல்களையும் காட்சிக்கு கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வரும் நவம்பர் 7 ஆம் தேதி ஹீரோ மோட்டோகார்ப் ஜூம் 160 அட்வென்ச்சர், 440சிசி பைக்குகள், மற்றும் விடா பிராண்டு மாடல்களும் EICMA 2023-ல் வெளியாகும்.