இந்தியாவின் முதல் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் என்ற பெருமையுடன் ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் நாளை விற்பனைக்கு வெளியாக உள்ளது. விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.7,000 வரை புதிய மாடலின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கலாம். முன்பே வெளிவந்த சில ஆவணங்களின் படி பவர் குறைக்கப்பட்டுள்ளது.
பிஎஸ் 4 ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட்டில் 9.3hp பவரை வெளிப்படுத்தும் 109.25சிசி என்ஜின் பொருத்தபட்டிருந்த நிலையில், இதற்கு மாற்றாக 113.2 சிசி என்ஜின் இடம்பெற உள்ளது. முந்தைய என்ஜினுக்கு முற்றிலும் மாற்றறாக புதிய FI என்ஜின் உருவாக்கப்பட்டிருக்கலாம். இந்த என்ஜின் அதிகபட்சமாக 9.0 ஹெச்பி (6.73Kw) பவரை தொடர்ந்து 7500 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குகின்றது. ஆனால் இதன் பவர் முந்தைய மாடலை விட 0.3 ஹெச்பி வரை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாடலின் டார்க் விபரம் கிடைக்கவில்லை.
மேலும், புதிய ஐஸ்மார்ட் பைக்கின் வீல்பேஸ் உட்பட நீளம், மற்றும் உயரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் இரு டயர்களிலும் டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக்குடன் கூடிய டிரம் என இரண்டு விதமான வேரியண்டுகள் கிடைக்க உள்ளது.
பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான FI என்ஜின், சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் புதிய பாடி கிராபிக்ஸ் உட்பட சில மாற்றங்களை கொண்டிருக்கும் என்பதனால் இந்த பைக்கின் விலை ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை உயர்த்தப்படலாம்.
மேலும் படிங்க – ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் அறிமுகம்