கவர்ந்திழுக்கும் ஹீரோ பிளெஷர் பிளஸ் 110 (Pleasure Plus 110) பெண்களுக்கான ஸ்கூட்டர்களில் மிக முக்கியமான ஒன்றாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முந்தைய மாடலை விட முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தினை புதிய ப்ளஷர் ப்ளஸ் வழங்க உள்ளது.
சக்தி வாய்ந்த என்ஜின், ஸ்டைலிஷான் ரெட்ரோ லுக், 7 விதமான நிறங்கள், நவீன அம்சங்கள் என பல்வேறு முக்கிய மாற்றங்களை பிளெஷர் பெற்றதாக வந்துள்ளது. ஆக்டிவா-ஐ, யமஹா ரே இசட், டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 போன்ற மாடல்களுடன் நேரடியாக சந்தையை பகிர்ந்து கொள்கின்றது.
ஹீரோ பிளெஷர் பிளஸ் 110
முன்பாக பிளஷர் ஸ்கூட்டரில் 102 சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருந்த நிலையில், பல ஆண்டுகளாக பாடி கிராஃபிக்ஸ் போன்றவற்றில் மட்டும் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தது. ஆனால் புதிய ஹீரோ பிளெஷர் பிளஸ் 110 பல்வேறு மாற்றங்கள் மற்றும் வசதிகளை கொண்டதாக வந்துள்ளது. அதன் முக்கிய விபரங்களை தொடர்ந்து காணலாம்.
முந்தைய பிளெஷரை விட சிறப்பான முறையில் ஸ்டைலிங் மாற்றங்களை கண்டுள்ளது. குறிப்பாக ஹெட்லைட் டிசைன் புதுப்பிக்கப்பட்டு சுற்றிலும் க்ரோம் பூச்சூ கொண்ட கிரில் வழங்கப்பட்டுள்ளது. முன்புற அப்ரான் பேனல்கள் மற்றும் பக்கவாட்டில் உள்ள பேனல்களின் தோற்றம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக டெயில் லைட் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
110.9 சிசி என்ஜின் கொண்டிருக்கின்ற இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 8 hp குதிரைத்திறன் மற்றும் 8.7Nm டார்க் வழங்கவல்லதாக விளங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
7 நிறங்களை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட சிவப்பு, பச்சை, கிரே நிறங்கள் உட்பட கருப்பு, நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களும் இடம்பெற்றுள்ளன.
புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலிஷான டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டரில் ஸ்பீடோமீட்டர் , ஓடோ மீட்டர், எரிபொருள் அளவு, மற்றும் சைடு ஸ்டேன்டு இன்டிகேட்டர் போன்றவை உள்ளது. அடுத்தப்படியாக யூஎஸ்பி சார்ஜர் மற்றும் க்ரோவ்பாக்ஸ் போன்றவற்றை பிளஷர் ப்ளஸ் பெற்றதாக வந்துள்ளது.
இன்று முதல் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள ஹீரோ பிளெஷர் + 110 ஸ்கூட்டர் ஆரம்ப விலை ரூ.47,300 (ஸ்டீல் சீட் வீல்) மற்றும் கேஸ்ட் வீல் கொண்ட பிளெஷர் + 110 விலை ரூ. 49,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.2,200 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற ஹோண்டா ஆக்டிவா 5ஜி, ஆக்டிவா-ஐ, யமஹா ரே இசட், டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 போன்ற மாடல்களுக்கு போட்டியாக விளங்குகின்றது.