இந்தியாவின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இத்தாலி மிலன் நகரில் நடைபெற உள்ள EICMA 2024 கண்காட்சியில் எக்ஸ்பல்ஸ் 400, எக்ஸ்பல்ஸ் 210, கரீஸ்மா 250 மற்றும் Xude 250 என நான்கு மாடல்களை காட்சிக்கு கொண்டு வரவுள்ளது.
இதுதவிர கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜூம் 160 மற்றும் ஜூம் 125ஆர் போன்ற மாடல்களின் உற்பத்தி நிலை மாடல், வீடா எலெக்ட்ரிக் பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படலாம்.
கடந்த சில வருடங்களாக எதிர்பார்க்கப்பட்டு வருகின்ற 440சிசி அல்லது 421சிசி என்ஜின் பெற உள்ள எக்ஸ்பல்ஸ் மிகவும் சிறந்த முறையில் ஆ்ப் ரோடு அனுபவத்தை வழங்கும் வகையிலும், நவீனத்துவமான வசதிகளுடன் மேம்பட்ட சஸ்பென்ஷன் அமைப்புடன், இந்திய மட்டுமல்லாமல் பல்வேறு சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள மாடலில் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷனுடன் ராயல் என்்பீல்டூ ஹிமாலயன் 450, கேடிஎம் 390 அட்வென்ச்சர் என பல்வேறு நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையில் உள்ளவற்றை எதிர்கொள்ளலாம்.
தற்பொழுது சந்தையில் கிடைக்கின்ற குறைந்த விலை அட்வென்ச்சர் ரக எக்ஸ்பல்ஸ் 200 மாடலின் மேம்பட்ட மாடல் அனேகமாக 210சிசி என்ஜின் பெற்றதாக வரக்கூடும். இதுதவிர, கடந்த வருடம் காட்சிப்படுத்தபட்ட எக்ஸ்சடன்ட் 2.5R அடிப்படையில் புதிய எக்ஸ்ட்ரீம் 250, மேம்படுத்தப்பட்ட புதிய கரிஸ்மா ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
நவம்பர் 4 ஆம் தேதி EICMA 2024 அரங்கில் புதிய கான்செப்ட்கள் உட்பட வீடா பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் பைக் மற்றும் குறைந்த விலை வீடா இ-ஸ்கூட்டரையும் எதிர்பார்க்கலாம்.