ஐ.பி.எஸ் எனப்படுகின்ற இன்ட்கிரேட்டேட் பிரேக்கிங் சிஸ்டத்துடன், ஹீரோ பைக்குகள் 125சிசிக்கு குறைவான மாடல்களில் இணைக்கப்பட்டு விற்பனைக்கு வெளியாகியுள்ளது. புதிய பாதுகாப்பின் காரணமாக ரூ.500 முதல் ரூ.2000 வரை அதிகபட்சமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுவாக கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் என அழைக்கபடுகின்ற அமைப்பினை இந்நிறுவனம் IBS (Integrated Braking System) என அழைக்கின்றது.
ஐபிஎஸ் பிரேக் என்றால் என்ன ?
வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் அடிப்படையான பாதுகாப்பு அம்சத்தை பெற்றிருக்க வேண்டும் குறிப்பாக 125சிசி-க்கு குறைந்த என்ஜின் பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் சிபிஎஸ் எனப்படுகின்ற பிரேக்கிங் நிறுத்தத்தை பெற்றிருக்கும்.
ஐபிஎஸ் என்றால் ஹீரோ நிறுவனத்தால் கம்பைன்டு பிரேக்கிங் முறைக்கு அழைகப்படுகின்ற பெயராகும். அதாவது இந்த பிரேக்குகளின் இயக்க முறை பின்புற பிரேக்குகளை இயக்கினால் முன்புற பிரேக்கும் சேர்ந்து இயங்கும் முறையே ஆகும்.
பெரும்பாலான தனது பைக் வரிசைகளில் ஐ.பி.எஸ் சிஸ்டத்தை இணைத்துள்ளது. குறிப்பாக கார்புரேட்டர் கிளாமர் மாடல்கள், ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பிளஸ் மற்றும் பேஸன் ப்ரோ முன்புற டிஸ்க் மாடல்களை தவிர அனைத்து 125சிசி க்கு குறைந்த மாடல்களிலும் இந்த பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.
Glamour FI ரூ. 69,200
HF Deluxe ரூ. 49,475
Passion Pro (Drum) ரூ. 54,975
Passion Pro 110 ரூ. 55,700
Splendor Plus ரூ. 54,050
Super Splendor ரூ. 59,814
Passion X-Pro ரூ. 56,800
Passion X-Pro (Disc) ரூ. 59,500
எஃப்ஐ அம்சத்தை பெற்ற கிளாமர் பைக் மாடல் அதிகபட்சமாக ரூ.2000 வரை அதிகரிக்கப்பட்டு மற்ற மாடல்கள் ரூ.500 , ரூ.650 என அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஹீஓ பைக்குகள் தற்போது டீலர்கள் கிடைக்க தொடங்கியுள்ளது.