ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்டைலிஷான ஃபேரிங் ஸ்போர்ட்டிவ் கரீஸ்மா XMR 210 பைக்கின் விலை ரூ.7,000 வரை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டு, புதிய விலை ரூ.1,79,900 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாக விற்பனைக்கு வரும்பொழுது ரூ.1,72,900 ஆக விலை அறிவிக்கப்பட்டிருந்தது.
Hero Karizma XMR
எக்ஸ்எம்ஆர் 210 பைக்கில் பொருத்தப்பட உள்ள 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் DOHC (Double Overhead Camshaft) அமைப்பினை பெற்று 9250rpm-ல் 25.5 hp பவர் மற்றும் 7,250rpm-ல் 20.5 Nm டார்க் வெளிப்படுத்தலாம். இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.
கரீஸ்மா மாடலின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டு 17 அங்குல வீல் பொருத்தப்பட்டிக்கின்றது.
ஹீரோ கரீஸ்மா XMR 210 பைக்கின் விலை ரூபாய் 1,79,900 (எக்ஸ்-ஷோரூம்).