350cc-500cc வரையில் உள்ள நடுத்தர ஆரம்ப நிலை மோட்டார்சைக்கிள்களில் ராயல் என்ஃபீல்டின் வலுவான சந்தை மதிப்பிற்கு சவால் விடுக்கின்ற ஜாவா 350, ஹார்லி-டேவிட்சன் X440, ஹோண்டா CB350, டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X மற்றும் புதிய ஹீரோ மேவ்ரிக் 440 ஆகிய மாடல்களின் விலை ஒப்பீடு மற்றும் முக்கிய அம்சங்களை அறிந்து கொள்ளலாம்.
ராயல் என்ஃபீல்டு 350சிசி பிரிவில் ஹண்டர் 350, மீட்டியோர் 350, கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 பைக்குகளின் மிக வலுவான சந்தை பங்களிப்பை பெற்றுள்ள நிலையில், இந்த மாடல்களுக்கு சவால் விடுக்கின்ற வகையில் உள்ள மிக நெருங்கிய போட்டியாளர்களையும் இங்கே அறிந்து கொள்ளலாம்.
போட்டியாளர்கள்: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வலுவான டீலர்ஷீப் எண்ணிக்கை மற்றும் பாரம்பரியத்தை கொண்டு தொடர்ந்து தனது சந்தை மதிப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் ஹார்லி டேவிட்சன் உடன் இணைந்து தயாரித்த X440 மற்றும் தற்பொழுது வந்துள்ள மேவ்ரிக் 440 மிகுந்த கவனத்தை பெறுவதுடன், மற்றொரு இந்திய தயாரிப்பாளரான பஜாஜ் ஆட்டோவின் டிரையம்ப் கூட்டணி முக்கிய பங்களிப்பை ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400X மூலம் வெளிப்படுத்துகின்றது. ஜாவா யெஸ்டி மற்றும் ஹோண்டா என இரண்டும் இந்த சந்தையில் உள்ளன.
நுட்பவிபரம் | Mavrick 440 | RE 350 | H-D X440 | Jawa350 | Triumph 400 | Honda CB350 |
என்ஜின் | 440cc | 349cc | 440cc | 334cc | 398.15cc | 124.45 cc |
சக்தி | 27 bhp at 6000rpm | 20.2 bhp at 6100rpm | 27 bhp at 6000rpm | 29.5 bhp and 28.4 Nm | 40 bhp at 8000rpm | 20.78 bhp at 5500rpm |
டார்க் | 36 Nm at 4000rpm | 27 Nm at 4000rpm | 38 Nm at 4000rpm | 28.4 Nm | 38 Nm at 6500rpm | 30 Nm at 3000rpm |
கியர்பாக்ஸ் | 6-speed | 5-speed | 6-speed | 6-speed | 6-speed | 5 speed |
இந்த பைக்குகளில் அதிகபட்ச பவரை டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400X பைக் 40 bhp வரை வெளிப்படுத்துகின்றது.
தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியல் பின்வருமாறு;- ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கின் விலை ரூ.2.36 முதல் ரூ.2.69 வரை உள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ரூ.1.75 லட்சம் முதல் ரூ.2.05 லட்சம் வரை உள்ளது. நிலையில் கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 அதிகபட்சமாக ரூ.2.70 லட்சம் வரை கிடைக்கின்றது.
தயாரிப்பாளர் | விலை (எக்ஸ்-ஷோரூம்) | ஆன்-ரோடு விலை |
Hero Mavrick 440 | ₹ 1,99,000- ₹ 2,24,000 | ₹ 2,35,790 – ₹ 2,69,654 |
Harley X440 | ₹ 2,39,500 – ₹ 2,79,500 | ₹ 2,95,190 – ₹ 3,41,864 |
Jawa 350 | ₹ 2,15,436 | ₹ 2,56,790 |
Triumph Speed 400 | ₹ 2,33,000 | ₹ 2,79,790 |
Triumph Scrambler 400 | ₹ 2,63,000 | ₹ 3,19,790 |
RE Classic 350 | ₹ 1,93,080 – ₹ 2,24,755 | ₹ 2,29,065 – ₹ 2,65,712 |
RE Bullet 350 | ₹ 1,73,550 – ₹ 2,15,801 | ₹ 2,08,189 – ₹ 2.57,090 |
Honda CB350 | ₹ 2,15,622 – ₹ 2,18,622 | ₹ 2,57,006 – ₹ 2,61,675 |
Honda Hness CB350 | ₹ 2,10,679 – ₹ 2,17,178 | ₹ 2,26,456 – ₹ 2,59,670 |
பொதுவாக இந்த பைக்குகள் ரெட்ரோ ஸ்டைல் மற்றும் க்ரூஸ் அனுவபத்தை வழங்கும் வகையில் உள்ள இந்த மாடல்களை தேர்ந்தெடுக்கும் பொழுது டெஸ்ட் ரைட் செய்து உங்கள் விருப்பமான ஒன்றை தேர்ந்தெடுத்து சிறந்த ரைடிங் அனுபவத்தை பெறுங்கள்.