ஹீரோ நிறுவனத்தின் மேவ்ரிக் 440 பைக்கின் டீசர் தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் எல்இடி ஹெட்லைட் விபரத்தை வெளியிட்டுள்ளது.
சந்தையில் உள்ள ஹார்லி-டேவிட்சன் X440 அடிப்படையில் மேவ்ரிக் பைக் 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 38 Nm at 4000rpm டார்க் வழங்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கும்.
Hero Mavrick 440 teaser
வெளியிடப்பட்ட டீசர் வீடியோ மூலம் மேவ்ரிக்கில் நெக்ட்டிவ் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டிருப்பது உறுதியாகியுள்ள நிலையில் டிஜிட்டல் முறையில் ஸ்பீடோமீட்டர், டேகோமீட்டர் கியர் பொசிஷன் இண்டிகேட்டர், பெட்ரோல் இருப்பு மூலம் கிடைக்க உள்ள தொலைவு மற்றும் மைலேஜ் இண்டிகேட்டர் மற்றும் சைட் ஸ்டாண்ட் அலர்ட் ஆகியவை அடங்கும்.
மேலும், ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட், டிஜிட்டல் கடிகாரம், மதிப்பிடப்பட்ட வருகை நேரம் (ETA) மற்றும் தொலைவு மற்றும் தொலைபேசி பேட்டரி இருப்பு ஆகியவற்றுடன் புளூடூத் இணைப்பையும் பெறுகிறது.
இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட்டில் H-வடிவ எல்இடி ரன்னிங் விளக்குடன், வட்ட வடிவ எல்இடி இண்டிகேட்டர்களும் உள்ளன. வெளிப்படுத்தப்பட்டுள்ள டீசர் மூலம் எக்ஸ்ஹாஸ்ட் நோட் ஆனது X440 பைக்கில் இருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளது. ஸ்போர்ட்டிவான க்ரூஸர் ஹீரோ மேவ்ரிக் 440 விலை ரூ. 2 லட்சத்தில் துவங்கலாம்.
இந்திய சந்தையில் கிடைக்கின்ற ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350, கிளாசிக் 350, டிரையம்ப் ஸ்பீடு 400 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.