ஹீரோ மோட்டோகார்ப் பிரீமியம் சந்தையில் வெளியிட உள்ள முதல் மேவரிக் 440 ரோட்ஸ்டெர் பைக்கின் டிசைன் தொடர்பான படங்களை வெளியிட்டிருப்பதன் மூலம் பைக்கின் தோற்ற அமைப்பு மற்றும் முகப்பு விளக்கு தொடர்பான வடிவத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.
மேவரிக் பைக்கில் உள்ள அடிப்படையான வடிவமைப்பு சந்தையில் உள்ள ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கில் உள்ள சேஸ் உட்பட என்ஜின் என பல்வேறு அம்சங்களை பகிர்ந்து கொள்ள உள்ளது.
Hero Mavrick
வெளியிட்டப்பட்ட மேவரிக் டீசர் டிசைன் மூலம் முகப்பில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் பெற்று H வடிவத்தை வெளிப்படுத்தும் வகையில் எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய புராஜெக்டர் எல்இடி ஹெட்லைட் பெற்றிருக்கின்றது.
டாப் வியூ தொடர்பாக ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள டிசைனில் ஒற்றை இருக்கை அம்சத்துடன் வட்ட வடிவ டிஎஃப்டி டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று டர்ன் பை டர்ன் நேவிகேஷன் ஹீரோ கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறுவதுடன் முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்தும் பெட்ரோல் டேங்க் மற்றும் டேங்க் எக்ஸ்டென்ஷன் கொண்டிருக்கலாம்.
சமீபத்தில் மேவரிக் 440 சோதனை ஓட்ட படங்களின் மூலம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்று பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் பெற்று இரு பக்க டயரிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் ஆனது பெற்றிருப்பதுடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் குறைந்த விலை வேரியண்டில் அமைந்திருக்கலாம்.
எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள், டயமண்ட்-கட் அலாய் வீல்கள் உள்ளிட்டவை ஹார்லி-டேவிட்சன் X440 மாடலில் இருப்பதனை விட சற்று வடிவமைப்பில் மாறுபட்டதாக அமைந்திருக்கின்றது.
வரும் ஜனவரி 23 ஆம் தேதி ரூ.2 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஹீரோ மேவரிக் 440 பைக்கில் 440cc என்ஜின் 6000 rpm சுழற்சியில் 27 bhp பவர் மற்றும் 4000rpm சுழற்சியில் 38Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
இந்திய சந்தையில் கிடைக்கின்ற ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350, கிளாசிக் 350, டிரையம்ப் ஸ்பீடு 400 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.