ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய 440சிசி என்ஜின் பெற்ற மேவரிக் பைக்கின் சாலை சோதனை ஓட்ட படங்கள் தற்பொழுது கிடைத்துள்ளது. ரோட்ஸ்டெர் ஸ்டைலை சார்ந்த வடிவமைப்பினை பெற்று X440 பைக்கிலிருந்து முற்றிலும் வித்தியாசப்படும் வகையிலான தோற்றத்தை கொண்டுள்ளது.
முன்பே ஹீரோ தனது வலைதளத்தில் அறிமுக தேதியை ஜனவரி 23 என உறுதிப்படுத்தியிருந்த நிலையில் மேவரிக் என்ற பெயரையும் குறிப்பிட்டிருந்தது.
Hero Mavrick Spied
ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கின் என்ஜினை பகிர்ந்து கொள்ளும் இந்த மாடல் 440cc ஏர் கூல்டு என்ஜின் 6000 rpm சுழற்சியில் 27 bhp பவர் மற்றும் 4000rpm சுழற்சியில் 38Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் கொண்டிருக்கின்றது.
X440 போல அல்லாமல் மேவரிக் 440 பைக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்று பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் பெற்று இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் ஆனது பெற்றிருப்பதுன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் குறைந்த விலை வேரியண்டில் அமைந்திருக்கலாம்.
ஹீரோ தனது பைக்குகளில் தற்பொழுது பயன்படுத்த துவங்கியுள்ள புதுப்பிக்கப்பட்ட H வடிவ ரன்னிங் விளக்குடன் கூடிய ஹெட்லைட், எல்இடி டர்ன் இன்டிகேட்டர் உட்பட பல்வேறு அம்சங்கள் ஹார்லி பைக்கிலிருந்து மாற்றப்பட்டுள்ளது.
தற்பொழுது விற்பனையில் உள்ள எக்ஸ்440 ரூ.2.39 லட்சத்தில் துவங்குவதனால் அதனை விட சற்று குறைவாக ரூ.2 லட்சத்தில் ஹீரோ மேவரிக் 440 விற்பனைக்கு வரக்கூடும் என்பதனால் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு கடும் சவாலாக அமைந்திருக்கலாம்.
Upcoming Hero Motocorp Mavrick 440 roadster #mavrick source youtube – Rj biker jp pic.twitter.com/xldQqVebJv
— Automobile Tamilan (@automobiletamil) January 10, 2024
image yt – Rj biker jp