ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் நடுத்தர மோட்டார்சைக்கிள் மாடலான மேவ்ரிக் 440 (Hero Mavrick 440) பைக்கின் டிசைன் படங்கள் இரண்டாவது முறையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய டிசைன் படத்தின் மூலம் பக்கவாட்டு தோற்றம் வெளியாகியுள்ளது.
மாடர்ன் ரோட்ஸ்டெர் ஸ்டைல் பெற்ற மாடலான மேவ்ரிக் 440 பைக்கில் X440 சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜினை பெற்றதாக வரவுள்ளது.
Hero Mavrick 440 teaser
மேவ்ரிக் 440 பைக்கில் பொருத்தப்பட உள்ள 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 4000rpm-ல் 38 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் கொண்டிருக்கும்.
வட்ட வடிவத்தை பெற்ற ஹெட்லேம்ப் உடன் H-வடிவ எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகளை பெற்று மிக முரட்டுத்தனமான எரிபொருள் டேங்க் உடன் எக்ஸ்டென்ஷன், ஒற்றை இருக்கை உறுதியாகியுள்ளது. செவ்வக வடிவிலான எக்ஸாஸ்ட் உடன் நேரத்தியான எல்இடி டெயில் லேம்ப் கொண்டுள்ளது. வட்ட வடிவ டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று கனெக்ட்டிவிட்டி அம்சங்களை கொண்டுள்ளது. இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது.
வரும் ஜனவரி 23 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கின் விலை ரூ.2 லட்சம் முதல் துவங்க உள்ளது.