வரும் ஜனவரி 23 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் பிரீமியம் மாடலான மேவரிக் பைக்கில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் உருவான X440 பைக்கின் அடிப்படையில் ரோட்ஸ்டெர் மாடலாக மேவரிக் 440 எதிர்பார்க்கப்படுகின்றது.
Hero Mavrick 440
ஹார்லி-டேவிட்சன் X440 பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற அதே என்ஜினை ஹீரோ மேவரிக் பைக் பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதனால் 440cc ஏர் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 38 Nm at 4000rpm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் கொண்டிருக்கின்றது.
சேஸ் உள்ளிட்ட அடிப்படையான பல்வேறு அம்சங்களை எக்ஸ்440 பைக்கில் இருந்து பெறப்பட்டு ஹீரோவின் புதிய மாடலின் வடிவமைப்பிற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் பெற்று இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றிருக்கும்.
சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மாடல் முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட H வடிவ ரன்னிங் விளக்குடன் கூடிய ஹெட்லைட், எல்இடி டர்ன் இன்டிகேட்டர் உட்பட பல்வேறு பாகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
3.5 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டரை கொண்டு பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை ஹீரோ எக்ஸ்டெக் மூலம் பெறுவதுடன் டிஜிட்டல் கிளஸ்ட்டராக அமைந்திருக்கலாம்.
நடுத்தர ரக மோட்டார்சைக்கிள் சந்தையில் முதன்மையான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துக்கு கடும் சவாலினை ஏற்படுத்தலாம் என எதிர்பாக்கப்படுகின்ற மேவரிக் 440 ஆனது ஜாவா, யெஸ்டி, டிரையம்ப் உள்ளிட்ட பைக்குகளுடன் சந்தையை பகிர்ந்து கொள்ளலாம்.