ரூ.72,950 விலையில் ஸ்டெல்த் பிளாக் நிறத்தை பெற்ற ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற மாடல்களை விட மேட் கிரே பெற்றதால் விலை ரூ.1500 வரை கூடுதலாக அமைந்துள்ளது.
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 பிஎஸ்6 மாடலில் 125 சிசி புரோகிராம் செய்யப்பட்ட எஃப்ஐ இன்ஜின் ‘எக்ஸ்ஸென்ஸ் டெக்னாலஜி’ உடன் வருகிறது. 9 bhp பவரினை 7000 ஆர்.பி.எம் மற்றும் 10.4 Nm டார்க்கினை 5500 ஆர்.பி.எம்-ல் வழங்குகின்றது. மேஸ்ட்ரோ எட்ஜ் 125 பிஎஸ்6 மாடல் 11 சதவீதம் அதிக எரிபொருள் சேமிப்பினை வழங்குகிறது.
தற்போது விற்பனையில் உள்ள மாடலின் தோற்ற அமைப்பு மற்றும் வசதிகளில் மாற்றம் இல்லாமல், டைமன்ட் கட் அலாய் வீல், ஸ்டெல்த் பாடி கிராபிக்ஸ், கார்பன் ஃபைபர் ஸ்டெர்ச்சூட், வெள்ளை நிற அசென்ட்ஸ் மற்றும் மேட் கிரே நிறம் இணைக்கப்பட்டு மிகவும் ஸ்டைலிஷாக அமைந்துள்ளது.
மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரில் 190 மிமீ டிஸ்க் அல்லது 130 மிமீ டிரம் பிரேக் என இரு ஆப்ஷன்களுடன், பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. 112 கிலோ எடை கொண்ட இந்த ஸ்கூட்டரில் 5 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஷாக் அப்சார்பர் மற்றும் பின்புறத்தில் ஸ்பீரிங் லோடேட் ஹைட்ராலிக் டேம்பர் உள்ளது.
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்டெல்த் விலை ரூ.72,950 (விற்பனையக விலை டெல்லி)
வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு எடிசன்களை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட உள்ளது. அந்த வரிசையில் அடுத்ததாக பிளெஷர் பிளாட்டினம் பிளாக் விற்பனைக்கு வரவுள்ளது.
web title : Hero Maestro Edge 125 ‘Stealth’ Edition launched price at Rs.72,950 – tamil bike news