இந்தியாவின் முதல் FI பெற்ற ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் மாடலில் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. கார்புரேட்டர் மற்றும் FI என இருவிதமான என்ஜின் ஆப்ஷனை பெற்றுள்ள இந்த ஸ்கூட்டரின் முக்கிய விபரங்களை தொடர்ந்து காணலாம்.
2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக காட்சிக்கு வந்த மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் மாடலின் அடிப்படையிலே தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 FI
இந்தியாவின் ஸ்கூட்டர் சந்தை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஹீரோவின் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டருக்கு முதன்முறையாக ஃப்யூவல் இன்ஜெக்டர் கொண்டதாக வந்துள்ளது.
மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 125-ல் பல்வேறு அம்சங்கள் 110 ஸ்கூட்டரில் உள்ளதை போன்றே அமைந்துள்ளது. குறிப்பாக ஹெட்லைட் , எல்இடி டெயில் லைட் உள்ளிட்டவற்றுடன் பாடி கிராபிக்ஸ் போன்றைவை சிறப்பாக அமைந்துள்ளது.
கார்புரேட்டர் கொண்ட 124சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8.7hp மற்றும் 10.2Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும். ஹீரோவின் ஐ3எஸ் நுட்பத்தினை பெற்றதாக அமைந்துள்ளது. அடுத்ததாக FI பெற்ற 9.2 hp மற்றும் 10.2Nm முறுக்குவிசை வெளிப்படுத்துகின்றது. இரண்டிலும் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது.
வெளிபுறத்தில் எரிபொருள் நிரப்பும் வசதி, டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டர் உடன் சர்வீஸ் இன்டிகேட்டர், யூஎஸ்பி சார்ஜிங், இருக்கை அடியில் உள்ள ஸ்டோரேஜ் பகுதியில் சிறிய விளக்கு போன்றவற்றுடன் ஸ்டைலிஷான் தோற்றம் மற்றும் கார்புரேட்டர் மாடல்களில் மட்டும் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட நான்கு நிறங்கள் கொண்டதாக விளங்குகின்றது. எஃப்ஐ மாடலில் வெள்ளை மற்றும் கருப்பு என இரு நிறங்கள் கிடைக்கும்.
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ரூ. 58,500 (டிரம் பிரேக்)
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ரூ. 60,000 (டிஸ்க் பிரேக்)
ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 FI ரூ. 62,700
(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)
ஹோண்டா கிரேசியா, ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் என்டார்க், அப்ரிலியா எஸ்ஆர் 125, போன்ற மாடல்களுக்கு போட்டியாக வந்துள்ளது.