இந்தியாவின் முன்னணி ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம், புதிய டேஸ் மின்சார ஸ்கூட்டர் ரூபாய் 62,000 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜிங் பெறுவதற்கு 4 மணி நேரத்தை எடுத்துக் கொள்ளும் இந்த மாடல் முழுமையான சார்ஜில் 60 கிமீ பயணத்தை மேற்கொள்ள இயலும்.
வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு ஏதுவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டேஸ் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள 48v ஆதரவை பெற்ற 20 Ah லித்தியம் ஐயன் பேட்டரி பேக்கை பெற்றதாக வந்துள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜினை பெறுவதற்கு அதிகபட்சமாக 4 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டேஸ் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குடன் கூடிய ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், USB சார்ஜிங் போர்ட், டியூப்லெஸ் டயர்கள் மற்றும் ரிமோட் அசெஸ் பெற்ற பூட் ஆகியவற்றை பெற்றுள்ளது.
முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வீன் சைடேட் ஸ்பீரிங் உடன் கூடிய ஷாக் அப்சார்பர் பெற்றதாக வந்துள்ள இந்த மாடலில் இரண்டு டயர்களில் டிரம் பிரேக் கொண்டுள்ளது.
டாஸ் அறிமுகத்தின் போது பேசிய இதன் தலைவர் ஹீரோ எலக்ட்ரிக் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தற்போது 1,000 டீலராக உயர்த்தவும் (தற்போதுள்ள 615 விற்பனை நிலையங்களில் இருந்து) உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளில் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 5 லட்சம் எண்ணிக்கையாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.