ஹீரோ மற்றும் ஹார்லி டேவிட்சன் கூட்டணியில் உருவான X440 பைக் முன்பதிவு 25,597 எண்ணிக்கை கடந்துள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. தற்பொழுது முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் எக்ஸ்440 பைக்கின் விலை ரூ.10,500 வரை வேரியண்ட் வாரியாக உயர்த்தப்பட்டது.
Harley Davidson X440
தலைமை செயல் அதிகாரி நிரஞ்சன் குப்தா இது பற்றி தெரிவிக்கையில், “ X440 மாடலுக்கான வாடிக்கையாளர்களின் வரவேற்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பிரிவில் வாடிக்கையாளர்கள் காட்டிய நம்பிக்கையைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், எங்களது முன்பதிவுகளில் பெரும்பாலானவை டாப் எண்ட் S மாடலுக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் சரியான பிராண்டுக்கு விலை கொடுக்கத் தயாராக உள்ளனர் என்பதைக் குறிக்கிறது.
பிரீமியம் பிரிவில் வெற்றி பெறுவதற்கான எங்கள் பயணத்தின் ஆரம்பம் இதுவே.” என குறிப்பிட்டார்.
ஹார்லி 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 38 Nm at 4000rpm டார்க் வழங்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.