CES 2019 கண்காட்சியில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஹார்லி டேவிட்சன் லைவ்வயர் எலக்ட்ரிக் பைக் அமெரிக்கா $29,799 (ரூ.21 லட்சம்) மதிப்பில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. லைவ்வயர் பைக் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 177 கிமீ பயணிக்கலாம்.
ஹார்லி டேவிட்சன் லைவ்வயர்
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் உற்பத்தி நிலை எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலாக விற்பனைக்கு அமெரிக்கா சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்த லைவ் வயர் மாடலின் உற்பத்தி நிலை மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான கட்டமைப்பினை பெற்ற ஹார்லி வைவ்வயர் மாடல் நவீனத்துவமான எலக்ட்ரிக் அம்சத்துடன் நேர்த்தியான கட்டுமானத்தை பெற்று கிளட்ச் இல்லாத மாடலாக twist and go (முறுக்கலாம் மற்றும் செல்லாம் ) என்ற வரிசையில் வெளியிட்டுள்ளது.
ஒரு முறை முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 177 கிமீ பயணிக்கு திறன் கொண்டிருப்பதுடன், 0-96 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.5 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும். 100 சதவீதம் முழுமையான டார்கை எந்த நேரத்திலும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
லைவ்வயர் பைக்கில் இடம்பெற்றுள்ள ஹார்லி டேவிட்சன் கனெக்டேட் சேவை வாயிலாக ரைடர்களை இணைத்துக் கொள்ளலாம். எல்டிஇ டெலிமேட்டிக்ஸ் மூலம் ஆதரவை கொண்டதனால் ஹார்லி டேவிட்சன் ஆப் மூலம் இணைத்துக் கொள்ளலாம்.
லைவ்வயர் ஏபிஎஸ் பிரேக் , டிராக்ஷன் கன்ட்ரோல் வசதியுடன் மிக நேர்த்தியாக வடிமைக்கபட்டுள்ளதால்வ எந்த மாதிரியான சூழ்நிலையிலும் வாகனத்தின் நிலைப்பு தன்மை பாதிக்கப்படாது.