இந்திய சந்தையில் கோகோரோ நிறுவனம், கிராஸ்ஓவர் சீரிஸ் எலக்டரிக் வரிசையில் வர்த்தக பயன்பாட்டிற்கான கிராஸ்ஓவர் GX250, கிராஸ்ஓவர் 50 மற்றும் கிராஸ்ஓவர் S என மூன்று விதமான வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் முதற்கட்டமாக டெல்லி மற்றும் கோவா என இரு பெருநகரங்களில் பேட்டரி ஸ்வாப்பிங் மையங்களை துவங்கியுள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டின் மத்தியில் மும்பை மற்றும் புனே நகரங்களில் பேட்டரி ஸ்வாப்பிங் நிலையங்களை துவக்க உள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Gogoro Crossover Electric Scooter
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ள கோகோரோ கிராஸ்ஓவர் GX250 மாடல் ஆனது முற்றிலும் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு ஏற்றதாக கிடைக்க துவங்கியுள்ளது. அடுத்து 2024 ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள கிராஸ்ஓவர் 50 மற்றும் கிராஸ்ஓவர் S என இரண்டும் தனிநபர்களுக்கான சந்தையிலும் கிடைக்க உள்ளது.
கிராஸ்ஓவர் GX250 மாடலில் 2.5 kW எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 111 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ ஆகும்.
கிராஸ்ஓவர் 50 மாடலில் 5.0 kW எலக்ட்ரிக் மோட்டாரும், கிராஸ்ஓவர் S மாடலில் 6.4 kW மற்றும் 7.2 Kw என இருவிதமான பவரை வழங்கும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும்.