ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பேஸன் பிளஸ் பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ள நிலையில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. புதிய பேஸன் பிளஸ் பைக்கில் 97.2cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த மாடலை போலவே அமைந்திருந்தாலும் பிஎஸ்6 புதிய OBD-2 மேம்பாடு மற்றும் E20 ஆதரவு பெற்ற என்ஜின் குறைந்த விலையில் அறிமுகம் செய்ப்படும் என்பதனால் ஷைன் 100 பைக் மாடலுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருக்கும்.
2023 Hero Passion Plus
தோற்ற அமைப்பில் முன்பாக விற்பனையில் கிடைக்கின்ற மாடலை போலவே அமைந்துள்ள பேஸன் பிளஸ் பைக்கில் இரண்டு நிறங்களை பெற்றுள்ளது. விற்பனையில் உள்ள HF டீலக்ஸ் மற்றும் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கிற்கு இடையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
பேஸன் பிளஸ் பைக் மாடலில் 97.2 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7.91 bhp at 8,000 rpm பவர் மற்றும் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது டீலர்களுக்கு கிடைக்க துவங்கியுள்ள பேஸன் பிளஸ் பைக்கில் செமி அனலாக் முறையிலான கிளஸ்ட்டர் கொண்டிருக்கும். இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.
விற்பனையில் உள்ள HF டீலக்ஸ், வரவிருக்கும் ஹோண்டா ஷைன் 100, டிவிஎஸ் ஸ்போர்ட், பஜாஜ் பிளாட்டினா 100 பைக்குகளுக்கு கடும் சவாலினை ஹீரோ பேஸ்ன் பிளஸ் ஏற்படுத்தும். முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் விரைவில் டெலிவரி துவங்கும்.