ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் 2024 ஆம் ஆண்டிற்கான FIM உலக ரேலி சாம்பியன்ஷிப் பட்டத்தை ரோஸ் பிரான்ச் (FIM World Rally-Raid Championship W2RC
2024) வென்றதை குறிப்பிடும் வகையில் சிறப்பு எடிசனை வெளியிடும் வகையிலான டீசரை சமீபத்தில் ஹீரோ மோட்டோ ஸ்போர்ட்ஸ் வெளியிட்டு இருக்கின்றது இந்த மாடல் அனேகமாக ஜனவரி 3, 2025-ல் அறிமுகம் செய்யப்படலாம்.
சமீபத்தில் EICMA 2024ல் புதிய எக்ஸ்பல்ஸ் 210 அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் இந்த மாடல் விற்பனைக்கு வர அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்கள் தேவைப்படும் என்பதனால், அதற்கு முன்பாக இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சிறப்பு மாடலை டக்கார் எடிசன் என்ற பெயரில் அனேகமாக ஏற்கனவே சந்தையில் உள்ள எக்ஸ்பல்ஸ் 200 4V புரோ மாடலின் அடிப்படையில் வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட உள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் மாடல் ஆனது பாடி கிராபிக்ஸ் மாற்றங்களை தவிர கூடுதலான சில ஸ்டைலிங் மாற்றங்களை மட்டுமே பெற்று இருக்கும் மற்றபடி அடிப்படையில் இந்த மாடலில் 200சிசி இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டிருக்கும் என நமக்கு கிடைத்த பிரத்தியேகமான தகவல் வாயிலாக தெரிய வந்துள்ளது.
ஹீரோ எக்ஸ்பல்ஸ் புரோ 4வி மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பதனால் சற்று மேல் நோக்கிய வகையிலான புகைப்போக்கி, முன்புறத்தில் உயரமான இடத்தில் அமைந்த ஃபென்டர் கொண்டிருக்கலாம்.
மேலும், வரவுள்ள புதிய சிறப்பு டக்கார் ரேலி எடிசன் எக்ஸ்பல்ஸ் 200 4வி விலை ரூ. 1.68 லட்சத்தில் அமையலாம். இதுதவிர இந்நிறுவனம் 2025 டெஸ்டினி 125 மாடலை வெளியிட உள்ளது.
இந்நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 200எஸ் மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி என இரு மாடலும் சமீபத்தில் நீக்கப்பட்டுள்ளது.